Author: THE GREAT INDIA NEWS

Category: education

புதுடெல்லி, மத்திய அரசின் ‘கேந்திரிய வித்யாலயா' பள்ளிகளில் முதலாவது வகுப்பில் சேர குறைந்தபட்சம் 6 வயது இருக்க வேண்டும் என்பது சரிதான் என டெல்லி உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை நீதிபதிகள் எஸ்.கே.கவுல், எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. பள்ளிகளில் முதலாவது வகுப்பு சேர குறைந்தபட்சம் 6 வயது இருக்க வேண்டும் என்பது தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டது என்றும், இது கல்வி உரிமை சட்டத்துக்கு எதிராக இல்லை என்றும் மத்திய அரசின் சார்பில் வாதிடப்பட்டது. அதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் முதலாவது வகுப்பில் சேர குறைந்தபட்சம் 6 வயது இருக்க வேண்டும் என்ற விதி சரிதான் என டெல்லி உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அளித்த தீர்ப்பை உறுதி செய்கிறோம். மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்கிறோம் என தெரிவித்தனர். சென்னை செய்தியாளர் கணேசன். இன்றைய செய்திகள் டெல்லி,இன்றைய முக்கிய செய்திகள் டெல்லி,இன்றைய செய்திகள் டெல்லி,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamklnadu news tamil,Tamil news daily,District news,Delhi news,Delhi news today tamil,Delhi latest news,6 year old rule correct to join first class in Kendriya Vidyalaya schools,supereme court,delhi high court

Tags:

Comments & Conversations - 0