• முகப்பு
  • political
  • தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தனிக்கட்சி ஆரம்பிக்க முடிவா?

தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தனிக்கட்சி ஆரம்பிக்க முடிவா?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

பல்வேறு கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து தரும் பிரசாந்த் கிஷோர், பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்.சமூக வலை தளம் மூலம் கடந்த, 2014 லோக்சபா தேர்தலின் போது, பிரதமர் நரேந்திர மோடிக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து தந்ததில் இருந்து இவர் பிரபலமானார். இவருடைய ஐபேக் நிறுவனம், தமிழகத்தின் தி.மு.க., மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் உட்பட பல கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து தந்துள்ளது. வரும் 2024 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து தரவும், அந்தக் கட்சியில் இணைந்து பணியாற்ற அவர் தயாராக இருந்த போது. காங்கிரசில் பலர் கடுமையான எதிர்ப்பு எழுப்பியதால், இறுதியில் தன் முடிவை மாற்றிக் கொண்டார். இந்நிலையில், சமூக வலை தளத்தில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளதாவது...... நம் ஜனநாயகத்தில், மக்கள் நல கொள்கைகளில் பங்கேற்க வேண்டும் என்ற என்னுடைய ஆசை, பல மேடு, பள்ளங்களை சந்தித்துள்ளது. உண்மையான முதலாளிகளான மக்களை நேரடியாக சந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. மக்கள் நலனுக்கான நிர்வாகத்தை அளிக்கும் பாதையை தேர்ந்தெடுக்க உள்ளேன். பீகாரில் என்னுடைய புதிய அத்தியாயம் துவங்க உள்ளது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். இதன் வாயிலாக, புதிய கட்சியை துவக்கி, பீஹார் அரசியஷலில் குதிக்க பிரசாந்த் கிஷோர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பை அவர் வெளியிடுவார் என, ஐபேக் நிறுவனம் கூறியுள்ளது. செய்தியாளர் பா. கணேசன். இன்றைய செய்திகள் இந்தியா,இன்றைய முக்கிய செய்திகள் இந்தியா,இன்றைய செய்திகள் இந்தியா,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest india news tamil,Tamil news daily,District news,india news live,india news tamil,world news,india news in tamil today,india news today in tamil,Todays india news,india news today,ipac prasanth kishore,ipac team,prasanth kishore

VIDEOS

RELATED NEWS

Recommended