குழந்தைகளின் ஸ்கூல் பேக் வாஸ்து பாக்கனுமா?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

குழந்தைகள் பள்ளிச்செல்லத் தயாராகிவிட்டார்கள். அவர்களின் புத்தகச்சுமை தற்போது சற்றுகுறைந்திருக்கிறது. குழந்தைகள் துாக்கிச்செல்லும் ஸ்கூல்பேக் எடை, அதன் வடிவம், அதை அணியும் முறை என, அனைத்துமே முக்கியத்துவம் பெறுகின்றன. முதுகில்சுமக்கும் வகையிலான ஸ்கூல்பேக்குகள் அதிகம் பயன் பாட்டில் உள்ளன. இருபுறமும் தோளில்லணியும் வகையான பேக்குகளையே அணியவேண்டும். ஒரு புறம் மட்டும் அணிவதால், அந்த எடையைச்சமன் செய்ய உடல் ஒருபுறமாகச்சாயும். இது, கழுத்து வலி, தோள் பட்டை வலி, முதுகு வலியை ஏற்படுத்தும். முதுகு ஏலும்பு பாதிக்கப்படும். ஆகவே, தோளின் இருபுறமும் அணிய வேண்டும். ஸ்கூல் பேக், உடலோடு ஒட்டி, இறுக்கமாக, முதுகின்மேற்புறம் வரை கச்சிதமாகப்பொருந்தும் வகையில் அணியவேண்டும். சிலர், மிகவும் தொங்கலாக அணிகின்றனர். அதனால், எடைபின்புறம் நோக்கி இழுத்து, முதுகெலும்புக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும். அப்படி அணியக் கூடாது. தோளில் அணிவதற்கான ஸ்டிராப்புகளை, முழுமையாக குறுக்கி, தோள் பட்டையோடு சேர்த்து அணியவேண்டும். அதிக எடையால், குழந்தைகள் முன் புறம் குனியவோ, ஒரு பக்கம் சாய்ந்து நிற்கும் படியாகவோ அணியக் கூடாது. மத்தியக்கல்வி அமைச்சகம், ஸ்கூல் பேக் தொடர்பான கொள்கைகளை வரையறைசெய்துள்ளது. பெற்றோர் அது குறித்து அறிந்து கொள்ளவேண்டும். பள்ளிகளிலும் செயல் படுத்த முன்வரவேண்டும். பொதுவாக, குழந்தைகளின் எடையில், 10% சதவீத அளவுக்கே ஸ்கூல் பேக் எடை இருக்க வேண்டும். ஸ்கூல் பேக்கினுள், ஒன்றுக்கும் மேற்பட்ட அறைகள் இருக்கவேண்டும். இதனால், புத்தகங்கள் ஒரே அறையில் வைக்கப் பட்டு, அதன்எடை, ஒரேஇடத்தில் குவிவது தவிர்க்கப் படும். மிக நீண்ட, தொங்கலான அமைப்பை உருவாக்கும் பெரியஸ்டிராப்புகளை தவிர்க்கவும். அகலமான பட்டைகொண்ட பேக்குகள், தோளில் எடையை சமமாகசுமக்க உதவும். இருபுறம் அணியும் பட்டைகளை, முன் புறமாக இடுப்பு அல்லது மார்புப்பகுதியில் இணைக்கும் வகையிலான வடிவ அமைப்பு கொண்ட ஸ்கூல்பேக்குகளை பயன் படுத்தலாம். இது, எடையை சமமாகப்பேண உதவியாக இருக்கும். ஒரு புறம் அணியும் பேக்குகள், கையில் தொங்க விட்டுச்செல்லும் பேக்குகளை தவிர்க்கவேண்டும். தொங்கவிடும் பேக்குகளை, தொடர்ந்து ஒரே கையில் சுமக்கும் போது, அது தோள் பட்டையை பாதிக்கும். சிலர் சக்கரம்பொருத்திய ஸ்கூல்பேக் பயன்படுத்துகின்றனர். அதுவும்தவறு என, நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சிறுவகுப்பு மாணவர்களை, வகுப்பறையில் ஒருசெட் புத்தகங்கள், வீட்டில் ஒருசெட் புத்தகங்களை பயன் படுத்த அனுமதிக்கலாம். அனைவரும் இருசெட், புதிய புத்தகங்கள் வாங்கவேண்டும் என்பதில்லை. கல்வி ஆண்டு முடிந்ததும், முந்தையஆண்டு மாணவர்கள் பயன் படுத்திய புத்தகங்களை வகுப்பறைகளிலேயே விட்டுச்செல்வதன் மூலம், செலவும், சுமையும் தவிர்க்கப் படும் என்ற பரிந்துரையும் நிபுணர்களால் முன் வைக்கப் படுகிறது. ஸ்கூல் பேக்கை, தவறானமுறையில் அணிந்தால், அது குழந்தைகளுக்கு நெளி முதுகு, எலும்பிணைப்பு உரு மாற்றம், முதுகெலும்புபாதிப்பு, முதுகு வலி என, உடல் ரீதியான பிரச்னைகளை ஏற்படுத்தக் கூடும் என, நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஸ்கூல்பேக்குகளின் எடை 2020ல், மத்தியகல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வித்துறை, ஸ்கூல்பேக் தொடர்பான கொள்கைகளை வெளியிட்டு உள்ளது. ஸ்கூல் பேக்குகளின் எடை, புத்தகங்களின் எடை, எத்தனை புத்தகங்களை அனுமதிக்கலாம், எடையைக்குறைக்க பள்ளி நிர்வாகத்தினர் மேற் கொள்ளவேண்டியவை..... எடையை அடிக்கடி கண்காணித்தல் உள்ளிட்ட ஏராளமான பரிந்துரைகள் அளிக்கப் பட்டுள்ளன. அதன் படி, குழந்தைகளின் வகுப்பும், பரிந்துரைக்கப்பட்ட ஸ்கூல்பேக் எடையும். வகுப்பு ஸ்கூல் பேக் எடை (கிலோவில்) 1 - 2 1 . 6 - 2 . 23 - 5 1 . 7 - 2 . 56 - 7 2 . 0 - 3 . 08 2 . 5 - 4 . 09 -10 2 . 5 - 4 . 511 -12 3 . 5 - 5 . 0 எல். கே. ஜி., யூ. கே. ஜி., வகுப்புகளுக்கு ஸ்கூல்பேக் இருக்கக் கூடாதென, பரிந்துரை செய்யப் பட்டுள்ளது. ஸ்கூல்பேக்குகளின் எடை 2020ல், மத்திய கல்விஅமைச்சகத்தின் பள்ளிக் கல்வித்துறை, ஸ்கூல்பேக் தொடர்பானகொள்கைகளை வெளியிட்டு உள்ளது. ஸ்கூல் பேக்குகளின் எடை, புத்தகங்களின் எடை, எத்தனை புத்தகங்களை அனுமதிக்கலாம், எடையைக்குறைக்க பள்ளிநிர்வாகத்தினர் மேற் கொள்ள வேண்டியவை, எடையை அடிக்கடிகண்காணித்தல் உள்ளிட்டஏராளமான பரிந்துரைகள் அளிக்கப் பட்டுள்ளன. அதன்படி, குழந்தைகளின் வகுப்பும், பரிந்துரைக்கப்பட்டஸ்கூல் பேக்எடையும் படத்தில் காணலாம். *அனுபவஸ்தன்*

VIDEOS

RELATED NEWS

Recommended