• முகப்பு
  • குற்றம்
  • திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி இளம் பெண்னை ஏமாற்றிய ஐ.பி.எஸ் அதிகாரி 

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி இளம் பெண்னை ஏமாற்றிய ஐ.பி.எஸ் அதிகாரி 

கார்மேகம்

UPDATED: May 11, 2023, 5:20:32 PM

சென்னையைச் சேர்ந்த இளம் பெண் ஓருவர் ஐ.பி.எஸ் அதிகாரி  செல்வநாகரெத்தினம் மீது கடந்தான்டு செப்டம்பர் மாதம் மின்னஞ்சல் மூலம் டீ.ஜி.பி க்கு புகார்அளித்துள்ளார்.

அதில் தமிழ்நாடு காவலர் பயிற்சி மையத்தின் துனை இயக்குனராக உள்ள ஐ.பி.எஸ் அதிகாரியான பி.செல்வநாகரெத்தினம் 2019ம் ஆண்டு என்னிடம் இன்ஸ்டாரகிராம் மூலம் பழகி என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி உடல் ரீதியான உடல் உறவில் ஈடு பட்டதாகவும் பின்னர் என்னிடம் முறையாக பேசவில்லை என்றும் இது குறித்து அவரிடம் கேட்ட போது துப்பாக்கியால் சுட்டு விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்ததாக சென்னையை சேர்ந்த அப்பெண் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக விசாரனை நடத்திய சி.பி.சி.ஐ.டி போலிசார்  செல்வநாகரெத்தினம் மீது ஓழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு அறிக்கை  தாக்கல் செய்தது.

இதனையடுத்து கடந்த டிசம்பர் மாதம் டி.ஜி.பி சார்பில் செல்வநாகரெத்தினத்திற்கு மெமோ அனுப்பப்பட்டு 30 நாட்களில் விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தது.

இதனை எதிர்த்து செல்வ நாகரெத்தினம்  சார்பில் சென்னையில் உள்ள மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் என் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஆவணங்கள் எனக்கு வழங்கப்படவில்லை என்றும் என் மீதான ஓழுங்கு நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டுமெனவும் கோரியிருந்தார்.

செல்வ நாகரெத்தினத்தின்  கோரிக்கையை மத்திய நிர்வாக தீர்ப்பாயம் நிராகரித்ததை எதிர்த்து அவர் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு  தொடர்ந்தார்.

அதில் நாண் திருமணமானவன் என்று தெரிந்தே அந்தப்பெண் என்னுடன் பழகினார் என்றும் அந்தப் பெண்னை நான் ஏமாற்றவில்லை எனவும் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி  போலிசார் நியாயமான முறையில் விளக்கம் அளிக்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் ஜெகதீஸ்சந்ரா சரவணன் அமர்வில் விசாரனைக்கு வந்தது.

அப்போது மனு குறித்து தமிழக டீ.ஜி.பி உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு  வழக்கு விசாரனையை ஜுன் 5ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended