• முகப்பு
  • tamilnadu
  • தெற்கு ரயில்வேயில் க்யூ ஆர் கோடு மூலம் டிக்கெட் பெறும் வசதி அறிமுகம்

தெற்கு ரயில்வேயில் க்யூ ஆர் கோடு மூலம் டிக்கெட் பெறும் வசதி அறிமுகம்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

க்யூ ஆர் கோடு மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெறும் முறையை அறிமுகப் படுத்தியது தெற்கு ரயில்வே தானியங்கி இயந்திரங்களில் க்யூ ஆர்’ கோடு மூலமாக பணம் செலுத்தி டிக்கெட் பெறும் முறையை தெற்கு ரெயில்வே அறிமுகப்படுத்தி உள்ளது. இரயில் நிலையங்களில் டிக்கெட் எடுப்பதற்கு பயணிகள் நீண்ட நேரம் டிக்கெட் கவுண்ட்டர்களில் நிற்பதற்கு பதிலாக தானியங்கி இயந்திரம் மூலமாக டிக்கெட் பெறும்வசதி தற்போது பயன்பாட்டில் உள்ளது. இது வரை தெற்குரெயில்வே சார்பில் ரெயில் நிலையங்களில் 99 தானியங்கி இயந்திரங்கள் பொறுத்தப் பட்டுள்ளன. இந்நிலையில் இந்த தானியங்கி இயந்திரங்களில் க்யூ ஆர் கோடு மூலமாக பணம் செலுத்தி டிக்கெட் பெறும் முறையை தெற்கு ரெயில்வே அறிமுகப் படுத்தியுள்ளது. இது குறித்து தெற்குரெயில்வே வெளியிட்டு உள்ள செய்திகுறிப்பில், டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் டிக்கெட்பெறுதல், சீசன் டிக்கெட்டுகளை புதுப்பித்தல் மற்றும் ஸ்மார்ட்கார்டுகளை ரீசார்ஜ்செய்தல் உள்ளிட்ட சேவைகளை க்யூ ஆர் கோடு மூலம் பணம்செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது. செய்தியாளர் பா.க. ஸ்ரீதேவி

VIDEOS

RELATED NEWS

Recommended