• முகப்பு
  • அரசியல்
  • கருணாநிதி படிப்பகம் என்பதற்கு பதிலாக கருணாநிதி குடிப்பகம் என்பதே சரி

கருணாநிதி படிப்பகம் என்பதற்கு பதிலாக கருணாநிதி குடிப்பகம் என்பதே சரி

மாரியப்பன்

UPDATED: Sep 25, 2023, 7:15:22 PM

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் தனியார் திருமண மஹாலில் நாம் தமிழர் கட்சி பெரம்பலூர் அரியலூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது.

தொடர்ந்து செய்தியாளர்களிடம்  சீமான் கூறியாவது...

காவிரி நதி நீர் பங்கீடு குறித்த கேள்விக்கு :

காவிரி நீரை பங்கீட்டு தராத உனக்கு, காவிரி நீர் தராத, போராடாத காங்கிரஸ் கட்சிக்கு எதற்கு ஒட்டு போடனும் என்று நினைப்பார்கள், ஆகவே கூட்டணியிலிருந்து விலகிட முடியுமா?

குறைந்த பட்ச தன்மானம் திமுகவிற்கு உண்டா என்று கேள்வி எழுப்பினர்.

நீட், கச்சதீவு, காவிரி நதி நீர் என ஒவ்வொன்றுக்கும் நீதிமன்றம் சென்றால் தான் பெற முடியும் என்றால் சட்ட மன்றம், பாராளுமன்றம் எதற்கு இந்த நாட்டை நிர்வகிப்பது மாண்புமிகு நீதியரசர்களா?மாண்புமிகு அமைச்சர்களா?

சட்டமன்றம் எதற்கு மேஜை தட்டுவதற்கா, பல்லாங்குழி , கிச்சு கிச்சு விளையாட்டு விளையாடுவதற்கா? என்று மக்களின் பிரச்சினைகளை பெற்று தருவதற்காகவே என்றும் மக்கள் பிரச்சினைகளை தீர்க்க முடியாத - சட்டமன்றம்,  பாராளுமன்ற த்தை கலைத்து விடலாமே? என்று தெரிவித்தார்.

அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு  ஆதரவாக தான் நீதிமன்றம் செயல்பட முடியும்

H. ராஜா மீது திமுக அவதூறு வழக்கு தொடர்ந்தது குறித்த கேள்விக்கு :

அவதூறு வழக்கு போட வேண்டுமென்றால் மொத்த திமுகவிற்கு போட வேண்டும், அவதூறான அரசியல் ஆரம்பித்து வைத்து அரிச்சுவடியை தொடங்கிய கட்சி திமுக என்றும் தெரிவித்தார்.

மகளிர் உரிமைத் திட்டம் குறித்த கேள்விக்கு :

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை வெறுக்கிறேன், மக்களின் வரிப்பணத்தில் கொடுக்க கூடிய திட்டத்திற்கு கருணாநிதி பெயர் எதற்கு  என்றும் - உங்க அப்பா பெயர் வைக்க கூடிய - ஒரே இடம் கருணாநிதி படிப்பகம் எதற்கு பதிலாக கருணாநிதி குடிப்பகம் என்று பெயர் வைக்கலாம் என தெரிவித்தார்.

மேலும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பேட்டி: சீமான் - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்

VIDEOS

RELATED NEWS

Recommended