• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • சாலை விரிவாக்கப் பணிகளில் குளறுபடி பொது நல கூட்டமைப்பினர் தொடர் போராட்டத்தை தொடர்ந்து கண்காணிப்பு பொறியாளர் தலைமையில் ஆய்வு

சாலை விரிவாக்கப் பணிகளில் குளறுபடி பொது நல கூட்டமைப்பினர் தொடர் போராட்டத்தை தொடர்ந்து கண்காணிப்பு பொறியாளர் தலைமையில் ஆய்வு

குமரவேல்

UPDATED: Sep 25, 2023, 2:26:11 PM

கடலூர் முதல் மடப்பட்டு வரை சுமார் 230கோடி செலவில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் நெல்லிக்குப்பத்தில் சுமார் 1கிலோமீட்டருக்கு சாலை பணிகள் ஒரு சில தனிநபர்களுக்கு ஆதரவாக நெடுஞ்சாலை துறையினர் செயல்படுவதாக நம்ம நெல்லிக்குப்பம் பொது நல கூட்டமைப்பு சார்பில் பலகட்ட போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

அதனைத்தொடர்ந்து விசிக சார்பிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பிலும் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.

அதனைத்தொடர்ந்து தலைமையிடத்து கண்காணிப்பாளர் வெங்கடாசலம் தலைமையில் கடலூர் கோட்ட பொறியாளர் பரந்தாமன் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் கூட்டம் கடலூர் பீச் ரோடு நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் நம்ம நெல்லிக்குப்பம் பொது நல கூட்டமைப்பைச் சேர்ந்த ஜெ.ராமலிங்கம், திலகர்,அபு சலீம், குமரவேல் மற்றும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மா.செ.மாதவன் பகுதி குழு செயலாளர் ஜெயபாண்டியன், புருஷோத்தமன் மற்றும் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேற்படி கூட்டத்தில் சாலை விரிவாக்கம் குறித்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை அதிகாரிகளிடத்தில் கொடுத்து விளக்கம் கேட்கப்பட்டது.

இது குறித்து கண்காணிப்பு பொறியாளர் தெறிவிக்கையில் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அவர்களிடம் நேரில் சந்தித்து கலந்துபேசி முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.

VIDEOS

RELATED NEWS

Recommended