சேனூர் ஊராட்சியில் வழங்கிய பஞ்சமி நிலங்களை மீட்க கோரி இந்திய குடியரசு கட்சி ஆட்சியரிடம் மனு!

வாசுதேவன்

UPDATED: May 22, 2023, 11:45:00 AM

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், சேனூர் ஊராட்சிக்கு உட்பட்ட முத்தமிழ் நகர் மனைப்பிரிவு செய்து பஞ்சமி நிலத்தை சர்வே எண் பிரித்து 59/2B, 60/2 என பல்வேறு சர்வே எண்கள் இதில் அடங்கியுள்ளன.

இவைகள் அனைத்தும் மனைப்பிரிவுகளாக மாற்றம் செய்து விற்பனை செய்து வருகின்றனர். காட்பாடி பத்திர பதிவு துறையினர் இதற்கு உடந்தையாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்த பஞ்சமி நிலம் சம்மந்தமாக தமிழ்நாடு தகவல் ஆணையம் வழக்குஎண்: M1785/B/2021-SA/9239/B/2020-03-12-2021 தகவல் ஆணையம், வேலூர் வருவாய் கோட்டாட்சியர், தகவல் அனுப்பிய விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு கோரி இருந்தனர் .

அனைத்து ஆவணங்களுடன் காட்பாடி வட்டாட்சியர் ,சேனூர் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) அனைவரையும் கடந்த 10.02.2022 பிற்பகல் 3 மணிக்கு உரிய  ஆவணங்களுடன் விசாரணையில் கலந்து கொள்ளுமாறு வேலூர் கோட்டாட்சியர் தெரிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் உரிய ஆவணங்களுடன் ஆஜராக விளக்கம் அளித்தனர். கிராம நிர்வாக அலுவலர் நாங்கள் தற்போது மின் இணைப்பு பெற எந்தவித கடிதமும் தற்பொழுது வழங்கவில்லை என பல்வேறு மனுக்களை வேலூர் வருவாய் கோட்டாட்சியருக்கு கடிதம் வாயிலாக கடந்த 3.02.2022ல் கொடுத்தனர்.

ஆனால் ஏதோ சேனூர் கிராம நிர்வாக அலுவலர் 21-02-2022 அன்று பஞ்சமி நிலத்ல் வீடு கட்டிக் கொள்ள சிவராஜ் என்பவருக்கு மின் இணைப்பு வேறு கொடுத்துள்ளனர். எனவே பஞ்சமி நில மனைப் பிரிவை முத்தமிழ் நகர் என பெயரிட்டு விற்பனை செய்து வருகின்றனர்.

இதை உடனடியாக நிறுத்தி கொள்ள வேண்டும். சேனூர் ஊராட்சி முத்தமிழ் நகர் பஞ்சமி நிலம் விற்பனை செய்வதை முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும். அதேபோல் பத்திரப்பதிவும் ரத்து செய்யப்பட வேண்டும்.

பஞ்சமி நிலத்தை மீண்டும் மீட்டு அதை கையில் எடுத்து வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள பட்டியல் இன மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் விரைவில் வழங்குமாறு இந்திய குடியரசு கட்சி தலைவர் பொறியாளர் ஆறுமுகம் கோரிக்கை வைத்துள்ளார்.

VIDEOS

RELATED NEWS

Recommended