• முகப்பு
  • india
  • இந்த ஆண்டு தரவரிசையில் இந்தியா 150 வது இடத்தில் உள்ளது.

இந்த ஆண்டு தரவரிசையில் இந்தியா 150 வது இடத்தில் உள்ளது.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

அனைத்து நாடுகளிலும் பத்திரிகையாளர்கள், செய்தி நிறுவனங்கள் மற்றும் இணைய பயன்பாட்டாளர்கள் கொண்டிருக்கும் சுதந்திரத்தின் அளவையும் அத்தகைய சுதந்திரத்தை மதிக்க அரசாங்கத்தின் முயற்சிகளையும் வைத்து உலக பத்திரிகை சுதந்திர குறியீடு நிர்ணயிக்கப்படுகிறது. அதன் படி எல்லைகளற்ற பத்திரிகையாளர்கள் , என்ற அமைப்பு ஆண்டு தோறும் பத்திரிகைகளின் சுதந்திரத்திற்கான தரவரிசையை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு தரவரிசையில் இந்தியா 150 வது இடத்தில் உள்ளது. 2016 ம் ஆண்டிற்கான தரவரிசையில் இந்தியா 133 வது இடத்தைப் பிடித்திருந்த நிலையில், ஐந்து ஆண்டுகளில் 17 இடங்களில் சரிந்து 150வது இடத்தைப் பிடித்துள்ளது. ஊடகத்தினர்களுக்கு எதிரான வன்முறை, அரசியல் சார்புடைய ஊடகங்கள் மற்றும் ஊடக உரிமைகள் பறிப்பு போன்ற செயல்கள் உலகின் மிகப் பெரிய ஜனநாயகம் போற்றும் இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் நெருக்கடியில் இருப்பதை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. செய்தியாளர் பா. கணேசன். இன்றைய செய்திகள் இந்தியா,இன்றைய முக்கிய செய்திகள் இந்தியா,இன்றைய செய்திகள் இந்தியா,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest india news tamil,Tamil news daily,District news,india news live,india news tamil,world news,india news in tamil today,india news today in tamil,Todays india news,india news today,press freedom,world press,India ranks 150th in this year's press rankings

VIDEOS

RELATED NEWS

Recommended