• முகப்பு
  • india
  • இந்தியா இந்துக்களுக்கு சொந்தமல்ல அப்ப யாருக்கு சொந்தம்?

இந்தியா இந்துக்களுக்கு சொந்தமல்ல அப்ப யாருக்கு சொந்தம்?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

இந்தியா யாருக்கு சொந்தம் என்றால் அது திராவிடர்களுக்கும் , ஆதிவாசிகளுக்கும் தான் சொந்தமென ஓவைசி தெரிவித்து உள்ளார். மராட்டியமாநிலம் பாய் வாடியில் நேற்றுநடந்த நிகழ்ச்சியில் அனைத்து இந்திய மஜ்லிக் இஇதிஹாத் உல் முஸ்லிமின் ( எ.ஐ.எம்.ஐ.எம் ) கட்சித்தலைவரும், ஐதராபாத் எம். பி. யுமான அசாதுதீன்ஓவைசி பங்கேற்றார். அந்தநிகழ்ச்சியில் பேசியஓவைசி, இந்தியா எனக்கோ, தாக்கரேக்களுக்கோ, மோடி - ஷாக்களுக்கோ சொந்தம் இல்லை. இந்தியா யாருக்கேனும் சொந்தம் என்றால் அது திராவிடர்களுக்கும், ஆதி வாசிகளுக்கும் தான். பாஜக , ஆர்.எஸ்.எஸ் முகலாயர்களுக்கு பின்னர் வந்தவை. ஆப்ரிக்கா, ஈரான், மத்திய ஆசியா, கிழக்கு ஆசியா போன்ற பகுதிகளில் இருந்து மக்கள் இடம் பெயர்ந்து வந்தபின்னரே இந்தியாஉருவானது என்றார்.  செய்தியாளர் க. துர்கா மதன்குமார்

VIDEOS

RELATED NEWS

Recommended