• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • திருநெல்வேலி ரெட்டியார்பட்டியில், 33 கோடி ரூபாய் மதிப்பில், 55 ஆயிரத்து 500 சதுர அடியில் அமையவுள்ள, "பொருநை" அருட்காட்சியகத்துக்கு, காணொளி காட்சி மூலம், அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்.

திருநெல்வேலி ரெட்டியார்பட்டியில், 33 கோடி ரூபாய் மதிப்பில், 55 ஆயிரத்து 500 சதுர அடியில் அமையவுள்ள, "பொருநை" அருட்காட்சியகத்துக்கு, காணொளி காட்சி மூலம், அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்.

மேலப்பாளையம் ஹஸன்

UPDATED: May 18, 2023, 7:05:23 PM

திருநெல்வேலியில், பொருநை நாகரீகத்தை மையப்படுத்தி, தாமிரபரணி ஆற்றின் கரையில், தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பாக, ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகளை ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட, அகழ் ஆய்வின் மூலம் கிடைத்த பல்வேறு பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில், உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம், திருநெல்வேலி பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டியில் அமைக்கப்படுகிறது.

நெல்லையின் அடையாளமாக, தமிழரின் அடையாளத்தை உலகிற்கு எடுத்துச் சொல்லும் வகையில் அமையவுள்ள, இந்த அருட்காட்சியகத்துக்கு, சென்னையில் இருந்தபடியே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று (மே.18) காலையில், "காணொளி காட்சி" (VIDEO CONFESSING) மூலம் அடிக்கல் நாட்டினார்.

இந்த அருங்காட்சியகம் அமைப்பதற்காக, பாளையங் கோட்டை ரெட்டியார் பட்டியில், மொத்தம் 13 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது.55 ஆயிரத்து, 500 சதுர அடி பரப்பளவில், 33 கோடியே, 02 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், இது அமைக்கப்படுகிறது! என்பது, குறிப்பிடத்தக்கதாகும்.

அடிக்கல் நாட்டு விழாவின், திருநெல்வேலி நிகழ்ச்சியில், தமிழக சபாநாயகர் மு.அப்பாவு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கா.ப.கார்த்திகேயன், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வகாப், நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் உட்பட, திரளானோர் கலந்து கொண்டனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended