Author: THE GREAT INDIA NEWS

Category:

உலக மகளிர் தினம் 1010 – பிர்தௌசி தனது சாஃனாமா என்ற இதிகாசத்தை எழுதி முடித்தார். 1618 – யோகான்னசு கெப்லர் கோள்களின் இயக்கங்களுக்கான மூன்றாவது விதியைக் கண்டுபிடித்தார். 1702 – ஆன் இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, அயர்லாந்து ஆகிய இராச்சியங்களின் அரசியாக முடிசூடினார். 1722 – ஈரானின் சபாவித்து அரசு ஆப்கானித்தானின் இராணுவத்தினரால் தோற்கடிக்கப்பட்டனர். 1736 – அப்சரித்து வம்சத்தின் நிறுவனர் நாதிர் ஷா ஈரானின் மன்னராக (ஷா) முடிசூடினார். 1817 – நியூ யோர்க் பங்குச் சந்தை நிறுவன மயப்படுத்தப்பட்டது. 1844 – முதலாம் ஆசுக்கார் சுவீடன்-நார்வே மன்னராக முடிசூடினார். 1868 – சப்பானிய சாமுராய் சக்காய் நகரில் 11 பிரெஞ்சுக் கடற்படையினரைக் கொன்றான். 1906 – பிலிப்பைன்சில் அமெரிக்கத் துருப்புக்களால் ஏறத்தாழ 600 ஏதிலிகள் படுகொலை செய்யப்பட்டனர். 1911 – அனைத்துலக மகளிர் நாள் முதன் முதலாக டென்மார்க்கில் கொண்டாடப்பட்டது. 1917 – பன்னாட்டு பெண்கள் நாள் ஆர்ப்பாட்டம் உருசியாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் இடம்பெற்றது. இதுவே பெப்ரவரிப் புரட்சியின் (பழைய யூலியன் நாட்காட்டியில் பெப்ரவரி 23) ஆரம்பமாகும். 1920 – முதலாவது நவீன அரபு நாடு சிரிய அரபு இராச்சியம் உருவாக்கப்பட்டது. 1921 – எசுப்பானியப் பிரதமர் எதுவார்தோ டாட்டோ மத்ரிதில் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறும்போது சுட்டுக் கொல்லப்பட்டார். 1924 – யூட்டாவில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற விபத்தில் 172 பேர் உயிரிழந்தனர். 1942 – இரண்டாம் உலகப் போர்: பர்மாவின் ரங்கூன் நகரை சப்பான் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து கைப்பற்றியது. 1947 – பெப்ரவரி 26 எதிர்ப்புப் போராட்டத்தை அடுத்து சீனக் குடியரசின் 13,000 இராணுவத்தினர் நடத்திய தாக்குதல்களில் தைவானில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். 1950 – சோவியத் ஒன்றியம் தன்னிடம் அணுக்குண்டு இருப்பதாக அறிவித்தது. 1957 – சூயெசு நெருக்கடிக்குப் பின்னர் எகிப்து சூயஸ் கால்வாயை முதல் தடவையாகத் திறந்தது. 1963 – சிரியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அங்கு பஹாத் கட்சி ஆட்சிக்கு வந்தது. 1965 – வியட்நாம் போர்: 3,500 அமெரிக்கப் படைகள் தென் வியட்நாமில் தரையிறங்கினர். 1971 – ஜோ பிரேசியர், முகம்மது அலி ஆகியோருக்கிடையேயான புகழ்பெற்ற நூற்றாண்டுக்கான குத்துச்சண்டை ஆரம்பமானது. இப்போட்டியில் பிரேசியர் 15 சுற்றுகளில் வென்றார். 1979 – பிலிப்சு நிறுவனம் குறுவட்டை முதற்தடவையாக அறிமுகம் செய்தது. 1983 – பனிப்போர்: அமெரிக்க அரசுத்தலைவர் ரானல்ட் ரேகன் சோவியத் ஒன்றியத்தை தீய பேரரசு என வர்ணித்தார். 2014 – 239 பேருடன் கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் நோக்கிச் சென்ற மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370 மாயமாக மறைந்தது. பிறப்புகள் - 1566 – கார்லோ கேசுவால்தோ, இத்தாலிய இசையமைப்பாளர் (இ. 1613) 1879 – ஓட்டோ ஹான், நோபல் பரிசு பெற்ற செருமானிய வேதியியலாளர் (இ. 1968) 1900 – அவார்டு அயிக்கன், ஆர்வர்டு மார்க் I ஐக் கண்டுபிடித்த அமெரிக்க இயற்பியலாளர், கணினி அறிவியலாளர் (இ. 1973) 1914 – யாகோவ் போரிசோவிச் செல்டோவிச், பெலருசிய-உருசிய இயற்பியலாளர், வானியலாளர் (இ. 1987) 1934 – ம. லெ. தங்கப்பா, தமிழக எழுத்தாளர் (இ. 2018) 1936 – ச. சாமிவேலு, மலேசிய-இந்திய அரசியல்வாதி 1940 – செபஸ்தியான் செபமாலை, ஈழத்து எழுத்தாளர், நாடக, நாட்டுக்கூத்துக் கலைஞர் 1943 – விக்கிரமபாகு கருணாரத்தின, இலங்கை அரசியல்வாதி 1976 – பிரெட்டி பிரின்ஸ் ஜூனியர், அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர் 1990 – பெத்ரா கிவிதோவா, செக் டென்னிசு வீராங்கனை இறப்புகள் - 1535 – இராணி கர்ணாவதி, இந்தியாவின் பூந்தி நகர இளவரசி 1702 – இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம் (பி. 1650) 1723 – கிறிஸ்டோபர் ரென், ஆங்கிலேயக் கட்டிடக் கலைஞர் (பி. 1632) 1844 – காருல் யோவான், சுவீடன்-நோர்வே மன்னர் (பி. 1763) 1869 – ஹெக்டர் பேர்லியோஸ், பிரான்சிய இசையமைப்பாளர் (பி. 1803) 1873 – ராபர்ட் வில்லியம் தாம்சன், ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர் (பி. 1822) 1923 – யோகான்னசு வான் டெர் வால்சு, நோபல் பரிசு பெற்ற டச்சு இயற்பியலாளர் (பி. 1837) 1930 – வில்லியம் டாஃப்ட், அமெரிக்காவின் 27வது அரசுத்தலைவர் (பி. 1857) 1957 – பி. ஜி. கெர், பம்பாய் மாகாணத்தின் முதல் பிரதம மந்திரி (பி. 1888) 1963 – அபிராம் தெபோரின், சோவியத் மார்க்சியவாதி, மெய்யியலாளர் (பி. 1881) 1971 – ஹரோல்ட் லாயிட், அமெரிக்க நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1893) 1974 – ஜே. பி. சந்திரபாபு, தமிழகத் திரைப்படப் பாடகர், நடிகர் (பி. 1924) 1977 – கிருஷன் சந்தர், இந்திய எழுத்த?

Tags:

Comments & Conversations - 0