Author: THE GREAT INDIA NEWS

Category: district

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், தஞ்சை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இன்று காலை முதல் தஞ்சை மாவட்டத்தில், ஒரத்தநாடு, திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய சட்டமன்ற தொகுதியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம், அங்கன்வாடி மையம், மாதிரி நூலகம் என பல்வேறு விதமான கட்டிடங்கள் மற்றும் வசதிகளை ரூபாய் 2 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் திறந்து வைத்து வருகிறார். இதில் ஒரு பகுதியாக, கும்பகோணம் தொகுதிக்குட்பட்ட நீரத்தநல்லூர் ஊராட்சி பகுதியில் ரூபாய் 10 லட்சத்தி 94 ஆயிரம் மதிப்பீட்டில் அமைந்துள்ள புதிய அங்கன்வாடி கட்டிடத்தை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்ற எளிய விழாவில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கு ஏற்றியும், கல்வெட்டினையும் திறந்து வைத்தார் . இந்நிகழ்ச்சியில், அரசு தலைமை கொறடா கோவி செழியன், ராஜ்யசபா எம்.பி எஸ் கல்யாணசுந்தரம், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ இராமலிங்கம், கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க அன்பழகன், கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் காயத்ரி அசோக்குமார், கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் சு ப தமிழழகன் கும்பகோணம் கோட்டாட்சியர் லதா உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கிடையே செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உயர்கல்வியில், அரசு பள்ளிகளில் பயின்ற மாணவ மாணவியர்களுக்காண 7.5 சதவீத இடஓதுக்கீடு குறித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது தற்போது அரசு பொதுத்தேர்வு எழுதிய மாணவ மாணவியர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. கல்லூரிகளில் ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக அனைவருக்கும் மதிப்பெண் பட்டியல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும், 13,331 தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்தில், சென்னை உயர்நீதிமன்ற சென்னை கிளையில், 25 மாவட்டங்களுக்குட்பட்ட சுமார் 11 ஆயிரம் ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கு கிளியரன்ஸ் பெற்றுள்ளோம், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 10 மாவட்டங்களுக்குட்பட்ட சுமார் 2 ஆசிரியர் பணி நியமனங்களுக்கு கிளியரன்ஸ் வாங்க வேண்டியுள்ளது. இதற்காக, மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவினை தாக்கல் செய்துள்ளோம் எனவே இவ்வழக்கு விசாரணைக்கு வரும் 7 மற்றும் 8ம் தேதிகளில் இதிலும் கிளியரன்ஸ் பெறுவோம் என நம்புகிறோம் என்றும் தெரிவித்தார். தமிழகம் முழுவதும் 2,500 பள்ளிகள் மரத்தடிகளில் இயங்கி வருவதை கண்டறிந்து இருப்பதாகவும், சிஎஸ்ஆர், மாவட்ட ஆட்சியர் நிதி, மக்கள் பிரதிநிதிகளின் நிதி, ரூபாய் 1,300 கோடி நபார்டு நிதி உள்ளிட்ட பல்வேறு நிதியுதவிகளை பயன்படுத்தி புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்ட விரைந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மேலும் தெரிவித்தார். கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்..

Tags:

#kumbakonamnews #dmk #ministeranbilmageshpoyyamozhi #pallikalvithurai #thanjavur #kumbakonamnewsintamil #kumbakonamnewslive #kumbakonamnewstoday #kumbakonamnewstodaytamil #kumbakonamnewspapertoday #இன்றையசெய்திகள்கும்பகோணம் #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #indrayaseithigaltamilnadu #indrayasithigalkumbakonamtamilnadu #todaynewstamilnadu #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #kumbakonamtodaynews #kumbakonamlatestnews #kumbakonamnews #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tamilnews #tamillatestnews #todaysindianews #tamilpoliticalnews #aanmegamnews #todaystamilnadunews #indiabusinesstoday #neyvelinewstoday #peoplestruggle
Comments & Conversations - 0