• முகப்பு
  • கல்வி
  • சத்தியமங்கலத்தில், தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு - உதவி காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடந்தது.

சத்தியமங்கலத்தில், தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு - உதவி காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடந்தது.

மகேஷ் பாண்டியன்

UPDATED: May 26, 2023, 12:06:22 PM

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள பண்ணாரி அம்மன் நிகேதன் பள்ளி வளாகத்தில் உள்ள மைதானத்தில், சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி வட்டாரத் தில் உள்ள 29 தனியார் பள்ளி களின், 156 வாகனங்களின் வருடாந்திர வாகன ஆய்வு, சத்தியமங்கலம் உதவி காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் இ.கா.ப. தலைமை யில் நடைபெற்றது.

இதில் கோபி வட்டாரப் போக்கு வர த்து அலுவலர் வெங்கட்ரமணீ, மற்றும் சத்தியமங்கலம் மோட் டார் வாகன ஆய்வாளர் பி. கண்ணன், வட்டார கல்வி அலுவலர் தேவகி ஆகியோர் பள்ளி வாகனங்களின் அவசர கால வழி சரியான முறையில் இயங்குகிறாதா? எனவும்,

இருக்கைகள் சரிவர அமைக்கப்பட்டுள்ளதா? தீ விபத்து ஏற்பட்டால் அதை அணைக்கக் கூடிய தீ தடுப்பு கருவிகள் உள்ளதா?, பாதுகாப்பு கேமரா க்கள்பொரு த்தப்பட்டிருக்கி றதா? ஆவணங்கள் சரியாக உள்ளதா? வாகன பிரேக் சரி யாக இயங்குகிறதா? எனவும், ஜ.பி.எஸ் கருவி மற்றும் வாகன உட்புற, வெளிப்புற கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.

மேலும் வாகன ஓட்டுநர் களுக்கு, வாகனத்தில் தீடி ரென தீ பிடித்தால், தீயை எப்படி அணைப்பது என்பது குறித்த செயல் விளக்கத்தை சத்தி தீயணைப்பு துறை நிலைய அலுவலர், செயல் விளக்கம் அளித்து, பயிற்சி அளித்தார்.

மேலும் ஆய்வு நாளன்று பள்ளி வாகன ஓட்டு நர்களுக்கு இலவச கண் பரிசோதனை செய்யப்பட்டது.

கோபி வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கட்ரமணி செய்தியாளர்களிடம் பேசுகை யில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகள் படி, போக்கு வரத்து துறை, காவல்துறை, வருவாய் துறை, பள்ளிக் கல் வித் துறை சார்பில் வாகன ஆய்வு மேற்கொள்வதாகவும்.,

ஆய்வுக்கு உட்படுத்தாதபள்ளி வாகனங்கள் இயக்கப்படு மானால், வாகனங்கள் பறி முதல் செய்யப்படும் என்றும் ஆய்வில் குறைகள் தென்படின், அதை நிவர்த்தி செய்ய நோட்டிஸ் வழங்கப்படும் என்றும், குறைகள் நிவர்த்தி செய்த பின் வாகனம் இயக்க  அனுமதி வழங்கப்படும் என  தெரிவித்தார்.

VIDEOS

RELATED NEWS

Recommended