Author: THE GREAT INDIA NEWS

Category: pondichery

புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது, மாலை நேரங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு புதுச்சேரி அடுத்த குச்சிபாளையம், சன்னியாசி குப்பம், திருக்கனூர், கூனிச்சம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது, இந்த மழையால் குச்சி பாளையத்தில் பத்து ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் மற்றும் 10 ஏக்கரில் பயிரிடப்பட்ட கரும்புகள் கடும் சேதம் அடைந்தது. இதனால் பெரும் நஷ்டத்தை விவசாயிகள் சந்தித்து உள்ளனர். கடன் வாங்கி விவசாயம் செய்து வரும் நிலையில் ஆண்டுதோறும் இதேபோன்று நடைபெற்று வருவதால் விவசாயம் செய்வதையே விட்டு விடலாம் என்ற எண்ணும் அளவிற்கு உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். மேலும் கரும்பு மற்றும் வாழைக்கு உரிய நஷ்டஈடு புதுச்சேரி அரசு வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்ததால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டு பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கியது. இதேபோல் மேலும் இதே போன்று சன்யாசி குப்பம் பகுதியில் சுமார் நூறு ஆண்டுகள் பழம் வாய்ந்த மரம் ஒன்று சாலையில் விழுந்தது இதனால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது இதனை அடுத்து மரங்களை வெட்டி அகற்றும் பணியில் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர். பாண்டிச்சேரி செய்தியாளர் சக்திவேல்.

Tags:

#இன்றையசெய்திகள்புதுச்சேரி #இன்றையமுக்கியசெய்திகள்புதுச்சேரி #இன்றையசெய்திகள்புதுச்சேரி #TheGreatIndiaNews #Tginews #news #pondicherynews #pondicherynewstoday #pondicherynewstamil #pondicherynewstodaytamil #pondicherynewspaperonline #pondicherycm #puducherry #puducherrynews #puducherrynewstoday #puducherrynewstamil #jipmerhospital #jipmerpondicherry #jipmer
Comments & Conversations - 0