• முகப்பு
  • புதுச்சேரி
  • நிலுவையில் உள்ள சம்பளத்தை போடுங்கள் இல்லை என்றால் பூச்சி மருந்து கொடுத்துக் கொள்ளுங்கள் சுட்டுத்தள்ளுங்கள் என போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் ஆவேசமானதால் பரபரப்பு.

நிலுவையில் உள்ள சம்பளத்தை போடுங்கள் இல்லை என்றால் பூச்சி மருந்து கொடுத்துக் கொள்ளுங்கள் சுட்டுத்தள்ளுங்கள் என போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் ஆவேசமானதால் பரபரப்பு.

சக்திவேல்

UPDATED: May 4, 2023, 6:23:10 PM

புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான பாசிக்கில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நிதிநிலை நெருக்கடி காரணமாக நிறுவனத்தை தொடர்ந்து நடத்த முடியாமல் அரசு கைவிட்டு விட்டது.

இதனால் அதில் பணிபுரிந்த ஊழியர்களும் வேலையும் இல்லாமல் சம்பளமும் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

கிட்டத்தட்ட 13 ஆண்டுகளாக சம்பளம் இல்லாமல் தவித்து வரும் இந்த ஊழியர்கள் மீண்டும் பாசிக் நிறுவனத்தை திறந்து பணி வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள சம்பளம் வழங்கப்பட வேண்டும் என பல கட்ட போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் புதுச்சேரி காமராஜர் சாலை பாலாஜி திரையரங்கில் இருந்து ஊர்வலமாக புறப்பட்ட பாசிக் ஊழியர்கள் நேரு வீதி, மிஷன் வீதி, வழியாக சட்டசபையை முற்றுகையிட முயன்றனர்.

அப்போது மாதா கோவில் அருகே தடுப்பு கட்டைகளை அமைத்து போலீசார் அவர்களை தடுக்க முயன்றனர்.

இதனால் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளானது..

தொடர்ந்து தடுப்பு கட்டையை தூக்கி எறிந்த ஊழியர்கள் புதுச்சேரி அரசால் நிறுவனத்தை நடத்த முடியவில்லை ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை என்றால் தங்களை பூச்சி மருந்து கொடுத்துக் கொள்ளுங்கள்...

அப்படி இல்லை என்றால் துப்பாக்கி எடுத்து சூட்டு தள்ளுங்கள்... என்று கூறி ஆவேசமடைந்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

இதனை அடுத்து திடீரென்று ஆம்பூர் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் இந்த போராட்டக் களமே சிறிது நேரத்தில் கலேபரமாக மாறியது.

இதனை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பாசிக் நிறுவன ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.

இதனால் புதுச்சேரியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

VIDEOS

RELATED NEWS

Recommended