• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • அரசு பேருந்தின் மேற்கூரையில் இருந்து மழை நீர் ஒழுகியாதால் குடை பிடித்தபடி பயணிகள் பயணம் செய்து அவதி.

அரசு பேருந்தின் மேற்கூரையில் இருந்து மழை நீர் ஒழுகியாதால் குடை பிடித்தபடி பயணிகள் பயணம் செய்து அவதி.

மகேஷ் பாண்டியன்

UPDATED: May 24, 2023, 7:08:20 PM

ஈரோடு மாவட்டம் தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மதியம் 3மணி முதல் கனமழை பெய்ய தொடங்கியது. இதனால் ஆங்காங்கே மழை நீர் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடியது.

அப்போது தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் வழியில் உள்ள கும்டாபுரம் அருகே அடர்ந்த வனப்பகுதி செல்கிறது .

இந்த அடர்ந்த வனப்பகுதிக்குள் காட்டாற்று பள்ளம் உள்ளது இதன் குறுக்கே தரைப்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.

தாளவாடி மற்றும் அவர்கள் சுற்றுவட்டார பகுதியில் பெய்யும் மழை நீர் இந்த காட்டுகிறது பள்ளம் வழியாக சொர்ணாவதி அணைக்கு செல்கிறது.

நேற்று மாலை பெய்த கனமழையால் தரைப் பாலத்தை மூழ்கடித்தபடி மழை நீர் சென்றது இதனால் சாலையின் இரு புறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றது.

இதனால் வாகன ஓட்டிகள் ஒரு மணி நேரமாக நீர் வடியும் வரை காத்திருந்தனர் மழை நீர் ஓரளவு வடிந்த பின் தரைப்பாலத்தை கடந்து சென்றனர்.

தாளவாடி மலைப்பகுதி என்பதால் பல்வேறு பகுதியில் தரைப்பாலம் உள்ளது. மழைக்காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

இதனால் தரைப்பாலத்தை உயர் மட்ட பாலமாக அமைக்க வேண்டும் என தாளவாடி மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடி நோக்கி வந்த அரசு பேருந்தில் மேற்கூரையில் மழைநீர் ஒழுகியதால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு தினசரி அரசு பேருந்துகள் இயக்கபடுகிறது.

இந்த நிலையில் தாளவாடி மலைப்பகுதியில் கன மழை பெய்தது. அந்த கனமழையால் சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடி நோக்கி வந்த அரசு பேருந்தில் மேற்கூரையில் மழைநீர் ஒழுகியது.

இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். இருக்கைகள் அனைத்தும் ஈரமாகிவிட்டதால் பயணிகள் எழுந்து நின்றவாறு பயணம் செய்தனர்.

இதனால் குழந்தைகள் கடும் அவதிக்கு ஆளாகினர். 

தரமான பேருந்துகளை தாளவாடி மலைப் பகுதியில் இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அரசு போக்குவரத்துக்கென்று பல்லாயிரம் கோடி செலவு செய்தும் இது போன்ற அவல நிலைகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது.

VIDEOS

RELATED NEWS

Recommended