• முகப்பு
  • மேகதாது அணை கட்டப்பட்டால் எட்டாயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்புள்ள வன இயற்கை ஆதாரம் பாதிக்கப்??

மேகதாது அணை கட்டப்பட்டால் எட்டாயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்புள்ள வன இயற்கை ஆதாரம் பாதிக்கப்??

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

மேகதாது : மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், அணை கட்டப்பட்டால் எட்டாயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்புள்ள வன இயற்கை ஆதாரம் பாதிக்கப்படும் எனவும், சுற்றுச்சூழல் பேரழிவுக்கு வழிவகுக்கும் என இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆஃப் சயின்ஸ் நிறுவன விஞ்ஞானி ராமச்சந்திரா கவலை தெரிவித்துள்ளனர். மேகதாது அணை கட்டுமானப் பணிக்காக அழிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள 4 ஆயிரத்து 835 ஹெக்டேர் நிலத்தில் 1,870 ஹெக்டேர் நிலம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் வருவதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வனப்பகுதியில் உள்ள பல்வேறு இயற்கை ஆதாரங்கள் மூலம் ஹெக்டேர் ஒன்றுக்கு ஆண்டுக்கு 6 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைப்பதாகத் தெரிவித்துள்ள அவர் அணை கட்டுவதற்காக வனப்பகுதி அழிக்கப்பட்டால் சுமார் 8 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்புள்ள வன ஆதாரம் அழியும் எனவும் கவலை தெரிவித்துள்ளார். அணை கட்ட அழிக்கப்பட உள்ள வனப்பகுதி முழுவதும் காவிரி நீர்பிடிப்பு பகுதிக்குள் வருவதை சுட்டிக்காட்டியுள்ள அவர் ஆண்டுதோறும் 100 டிஎம்சி தண்ணீர் இந்த பகுதிகளில் இருந்து உற்பத்தியாவதாகவும் 65 டிஎம்சி தண்ணீரை தேக்கும் மேகதாது திட்டத்துக்காக இந்த வனப்பகுதி அழிக்கப்பட்டால் 100 டிஎம்சி தண்ணீர் உற்பத்திக்கான ஆதாரம் அழிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். பெங்களூரு நகருக்கு மேகதாது அணை திட்டத்தின் மூலமாக 5 டிஎம்சி குடிநீர் மட்டுமே கிடைக்கும் என்றும் பெங்களூர் நகரத்தில் உள்ள அனைத்து ஏரிகளையும் தூர்வாரினாலே 15 டிஎம்சி மழைநீரை சேகரித்து பயன்படுத்த முடியும் என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார் 100 டிஎம்சி நீர் உற்பத்தி மற்றும் 8 ஆயிரத்து 100 கோடி மதிப்புள்ள வனப்பகுதி இயற்கை ஆதாரத்தை அழித்து ஆறாயிரம் கோடி செலவில் மேகதாது அணை கட்ட முயற்சிப்பது மிகப்பெரிய இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பேரழிவு எனவும் எச்சரித்துள்ளார் ... #karnataka #கர்நாடக #மேகதாதுஅணை #dam #kauveririver

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended