• முகப்பு
  • other
  • தென்தமிழக கடலோரபகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும்.

தென்தமிழக கடலோரபகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

வட உள் தமிழகத்தின் மேல்நிலவும் வளி மண்டல மேலடுக்குசுழற்சி காரணமாக இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானமழை பெய்யக் கூடும் என சென்னைவானிலை ஆய்வுமையம் கணித்துள்ளது. அதன் படி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சிதிண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிருஇடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு ஊள்ளதாக வானிலைமையம் தெரிவித்து உள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சிலஇடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக் கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை 27டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக் கூடும் எனவும் வானிலைமையம் கூறியுள்ளது. மேலும், தென்கிழக்கு அரபிக் கடல், இலட்சத்தீவு, மாலத்தீவு, கர்நாடகா கேரளா கடலோர பகுதிகள், தெற்கு வங்கக்கடல், அந்தமான், மத்தியகிழக்கு வங்கக் கடல், மன்னார் வளைகுடா, குமரிக் கடல்பகுதி, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள் மற்றும் தென்தமிழக கடலோரபகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக் கூடும் என்பதால் வருகின்ற மே மாதம் 22 ம் தேதி வரை மேற் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என வானிலைமையம் எச்சரித்துள்ளது. செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended