• முகப்பு
  • district
  • தரைக்கடை வாடகை வசூலிப்பதை கண்டித்து, நூற்றுக்கணக்கானோர் கண்டன ஆர்ப்பாட்டம்.

தரைக்கடை வாடகை வசூலிப்பதை கண்டித்து, நூற்றுக்கணக்கானோர் கண்டன ஆர்ப்பாட்டம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கும்பகோணம் மாநகராட்சியாக தகுதி உயர்ந்தப்பட்டதை தொடர்ந்து, கடந்த ஜூன் 01ம் தேதி முதல், ரூபாய் 10 ஆக இருந்த சாலையோர தரைக்கடைகள் மற்றும் தள்ளுவண்டிகளுக்காண வாடகை கட்டணம் ரூபாய் 50 ஆக 5 மடங்கு உயர்தப்பட்டுள்ளது. இது தமிழக அரசின் 2015 அரசாணைக்கு எதிரானது, ஆண்டிற்கு ரூபாய் 375 மிகாமல் வாடகை இருக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது, இதனை கண்டித்து கண்டன பேரணி, மற்றும் மாநகராட்சி முன்பு ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. தொடர்ந்து தெருக்கடைக்காரர்கள் பழைய வாடகையான 10 ரூ வசூல் செய்ய வேண்டும் நீண்ட நாட்களாக கூட்டப்படாமல் உள்ள வியாபார குழு கூட்டத்தை உடனே கூட்டிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காந்தி பூங்கா முன்பு தெரு வியாபார தொழிலாளர் சங்க தலைவர் சிவக்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியூசி மாநில பொதுச்செயலாளர் மூர்த்தி சட்ட ஆலோசகர் பாரதி மாநிலச் செயலாளர் சந்திரகுமார் மாவட்ட செயலாளர் தில்லைவனம் உள்ளிட்ட நிர்வாகிகள் கிளை பொறுப்பாளர்கள் தெரு வியாபார தொழிலாளர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு மாநகராட்சி கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள். கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்.

VIDEOS

RELATED NEWS

Recommended