• முகப்பு
  • aanmegam
  • சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலின் 81வது ஆண்டு வசந்த பாலாபிஷேகத்தை முன்னிட்டு இன்று நூற்றுக்கணக்கானோர் வழிபாடு .

சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலின் 81வது ஆண்டு வசந்த பாலாபிஷேகத்தை முன்னிட்டு இன்று நூற்றுக்கணக்கானோர் வழிபாடு .

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கும்பகோணம் அம்மன்கோயில் தெருவில், பிரசித்தி பெற்ற எல்லையம்மன், மகாமாரியம்மன், திரௌபதியம்மன், சித்தி விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது, இக்கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் வசந்த பாலாபிஷேக பெருவிழா சிறப்பாக நடைபெறும் . அதுபோலவே, 81வது ஆண்டாக, கடந்த 10ம் தேதி பூச்சொரிதலுடன், காப்பு கட்டி விழா தொடங்கி, நாள்தோறும் அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. விழாவின் 4ம் நாளான இன்று, அம்பாள் வேல் காவிரி கரையில் இருந்து சிறப்பு அபிஷேகம் செய்து புறப்பட்டது அதனை தொடர்ந்து மங்கல வாத்தியங்கள் முழங்க, அலகு காவடிகளுடன் நூற்றுக்கணக்கானோர் பால் குடங்களை சுமந்து முக்கிய வீதிகள் வழியாக திருக்கோயிலுக்கு வந்து பாலாபிஷேகம் செய்து தரிசனம் செய்து வழிபட்டு தங்களது நேர்த்திக்கடன் நிறைவேற்றி மகிழ்ந்தனர். தொடர்ந்து வரும் 15ம் தேதி ஞாயிறு சுந்தரமாகாளியம்மன் திருநடனத்துடன் திருவீதியுலா நடைபெற்று தொடர்ந்து 16ம் தேதி தீமிதி உற்சவமும், பிறகு 18ம் தேதி புதன்கிழமை அம்பாள் புறப்பாடு மற்றும் விடையாற்றியுடன் இவ்வாண்டிற்காண வசந்த பாலாபிஷேக பெருவிழா இனிதே நிறைவு பெறுகிறது

VIDEOS

RELATED NEWS

Recommended