• முகப்பு
  • crime
  • 50 கோடி ரூபாய் பணத்தை சுருட்டிய அமுத்சுரபி என்ற நிறுவனம் நூற்றுக்கணக்கானோர் முற்றுகை.

50 கோடி ரூபாய் பணத்தை சுருட்டிய அமுத்சுரபி என்ற நிறுவனம் நூற்றுக்கணக்கானோர் முற்றுகை.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவில் இயங்கி வருகிறது அமுத்சுரபி என்ற தனியார் நிதி நிறுவனம் . இதில் உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், தினசரி சேமிப்புக் கணக்குத் தொடங்கி தினசரி சேமிப்பாக ரூபாய் 100 முதல் ஆயிரம் வரை தினசரி பணம் கட்டி வந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரும் தொற்று காரணமாக இந்த நிறுவனத்தின் அனைத்து கிளைகளும் மூடப்பட்ட நிலையில் , கடந்தாண்டு திறக்கப்பட்டு வழக்கம்போல் சேமிப்பு பணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் பணம் கட்டியவர்கள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தங்களது முதிர்வு காலம் முடிந்த நிலையில் , பணத்தை திரும்பப் பெறுவதற்கு முறையாக அனுகிய நிலையில் , பணம் கட்டிய நபர்களுக்கு பணம் கொடுக்கப்படாமல் அலைகழிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் இந்த நிறுவனத்தில் பல்வேறு கிளைகளில் இதே பிரச்சனையை இருந்து வந்த நிலையில் , இன்று உளுந்தூர்பேட்டை கிளை அலுவலகத்தை சுமார் 200க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் . அங்கு தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தியபோது ரூபாய் 50 கோடிக்கு மேல் வாடிக்கையாளர்களிடம் வசூல் செய்த பணம் திரும்பி கொடுக்கப்படாதது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி செய்தியாளர் ஆதி. சுரேஷ்

VIDEOS

RELATED NEWS

Recommended