Author: THE GREAT INDIA NEWS

Category: tamilnadu

நீங்கள் சாப்பிடும்மாம்பழம் இயற்கைமுறையில் பழுக்க வைக்கப்பட்டதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்..! கார்பைடுகல் மூலம் பழுக்க வைக்கப் பட்ட மாம்பழங்கள் பறிமுதல் செய்யப் படும் நிலையில் இதை இல்லாமல் பழுக்கவைக்க முடியாது என வியாபாரிகள் அழுத்தமாக தெரிவிக்கிறார்கள். மரங்களில் சுரக்கும் எத்திலின்வாயுவால் இயற்கையாகபழுத்து நமக்கு கிடைக்கும் மாம்பழங்கள் எப்பொழுதும் தனிசுவையுடன் இருக்கும். தற்போது அது காயாக இருக்கும் பருவத்தில் அறுவடை செய்யப் பட்டு செயற்கைமுறையில் கார்பைடு கற்கள்மூலம் பழுக்க வைத்த பின் சந்தைக்கு வருகிறது. இந்த வேலையை விவசாயிகள் செய்கிறார்களா அல்லது அதிக லாபம் சம்பாதிக்க நினைக்கும் வியாபாரிகள் இதனை செய்கிறார்களா? இதற்கு காரணம். மா தோப்புக்களை ஒரு குறிப்பிட்ட பெரிய தொகைக்கு குத்தகைக்கு எடுக்கும் வியாபாரிகள் முதிர்ச்சியடையும் முன் முழுவதையும் பறித்துவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. பழுத்தபழங்கள் முதல் பிஞ்சு வரை அனைத்தையும் குவித்து பழுப்புநிறத்தில் வைத்து இருப்பது தான் இந்த கார்பைடுகல் விஷம். கார்பைடுகல் இல்லாமல் காய்கள் காய்க்காது என வியாபாரிகள் பல்வேறு வகையான பொய்களை தெரிவித்தாலும், விவசாயிகள்பலர் இயற்கையான முறையில் பழங்களைபழுக்க வைக்கிறார்கள். மாம்பழங்கள் இயற்கையாக பழுக்கவைக்க அறுவடையில் கவனம் செலுத்துவது மிகமுக்கியம். முதிர்ந்த காய்களை மட்டும் முதலில் அறுவடை செய்யவேண்டும். பறித்த மாம்பழங்களில் இருந்து பால்வடிந்ததும் பழையபேப்பரை தரையில்விரித்து பரப்பி வைத்தால் பழங்கள் பழுத்து விடும். காய்களை இயற்கையாகப்பழுக்க வைக்க சில வழி முறைகள் உள்ளன அதிக எண்ணிக்கையிலானபழங்கள் இருந்தால் அவற்றை இருட்டறையில் புகைமூட்டம் போட்டு பழுக்க வைப்பது பழமையானது. ஆவாரம்இலை, வேப்பிலை, என அந்தந்தப் பகுதிகளில் எளிதாக கிடைக்கும் இலைகளை மூடிபழுக்க வைப்பது விவசாயிகளின் வழக்கம் இல்லத்தரசிகள் ஆவாரம் இலைகூட பயன் படுத்தாமல் அரிசியில்பழங்களை பழுக்கவைத்து விடுவார்கள். புகைப்போடாமல் வைக்கோலைப் பயன் படுத்தி பழுக்கவைக்கும் முறைகளும் இருக்கிறது, இவ்வாறு வைக்கும் போது வெளியாகும் வெப்பத்தால் மாங்காய்கள் ஒரே வாரத்தில் இயற்கையாகவே பழுத்துவிடும். இயற்கையான முறையில்கிடைக்கும் மாம்பழங்களை சாப்பிடுவதால் மாம்பலத்தில் உள்ள அனைத்துவகையான ஊட்டச்சத்துக்களும் உடலுக்குகிடைக்கும். *அனுபவஸ்தன்*

Tags:

#இன்றையசெய்திகள்தமிழ்நாடு #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழகம் #நகராட்சி #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tamilnadunewstodaytamil #tamilnaduflashnewstamil #corporation
Comments & Conversations - 0