• முகப்பு
  • other
  • போலி 500 ரூபாய் நோட்டை எப்படி அடையாளம் காண்பது ?

போலி 500 ரூபாய் நோட்டை எப்படி அடையாளம் காண்பது ?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

1. ரூபாய்நோட்டை ஒளியின் முன்காண்பித்தால், ரூபாய்மதிப்பு எண்ணின் ஸீ - த்ரூ ரெஜிஸ்டர் ( ஒளிபுகும் போது ) தோன்றும் காட்சித்தெரியும். 2. ரூபாய்நோட்டை 45 டிகிரிகோணத்தில் கண்முன் தூக்கிபார்த்தால் இந்த இடத்தில் 500 என்று எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். 3. தேவநாகரியில் 500 எழுதப் பட்டிருக்கும். 4. மகாத்மாகாந்தியின் படம் நடுவில் வலது புறம் இருக்கு. 5.  India என்ற எழுதப் பட்டிருக்கும். 6. ரூபாய்நோட்டை லேசாக வளைத்தால், பாதுகாப்புநூலின் நிறம் பச்சைநிறத்தில் இருந்து இண்டிகோவாக மாறும். 7. பழையரூபாய நோட்டை ஒப்பிடுகையில், கவர்னரின் கையெழுத்து, உத்தரவாத சரத்து, வாக்குறுதி சரத்து மற்றும் ரிசர்வ்வங்கியின் சின்னம் வலதுபக்கமாக மாறியுள்ளது. 8. இங்கு மகாத்மாகாந்தியின் படம் உள்ளது. மேலும்  எலக்ட்ரோடைப் வாட்டர்மார்கும் தெரியும். 9. மேல் இடதுபக்கம் மற்றும் கீழேவுள்ள வலது பக்கஎண்கள் இடமிருந்துவலமாக அளவில் பெரிதாகஇருக்கும். 10. இங்கு எழுதப் பட்ட 500 என்ற எண்ணின் நிறம்மாறுகிறது. அதன்நிறம் பச்சைநிறத்தில் இருந்து நீலமாகமாறும். 11. வலதுபக்கம் அசோகத்தூண் காணலாம். 12. வலதுபக்க வட்டப்பெட்டியில் 500 என்று எழுதப் பட்டிருக்கும். வலது மற்றும் இடது பக்கத்தில் ஐந்து பிளீட் கோடுகள் மற்றும் அசோகதூணின் சின்னம், மகாத்மாகாந்தியின் படம் ரஃபிள் அச்சில் உள்ளது. 13. நோட்டு அச்சடிக்கப் பட்ட ஆண்டு எழுதப் பட்டிருக்கும். 14. ஸ்வச்பாரத் லோகோ வாசகத்துடன் அச்சிடப் பட்டிருக்கும். 15. மையப் பகுதியில், பல மொழிகளில் எழுதப்பட்டிருக்கும். 16. இந்தியக்கொடியுடன் செங்கோட்டையின் படம் அச்சிடப் பட்டுள்ளது. 17. தேவ நாகரியில் 500 அச்சுகளுள்ளன. செய்தியாளர் பா. க. ஸ்ரீதேவி

VIDEOS

RELATED NEWS

Recommended