Author: THE GREAT INDIA NEWS

Category: india

பூர்வீகச்சொத்து எவை என்று எப்படித்தெரிந்து கொள்வது? 1956 ல் இந்து வாரிசுரிமைச்சட்டம் அமலுக்கு வந்தது. அதற்கு முன்னர் இந்து சாஸ்திரச்சட்டமே அமலிலிருந்து வந்தது. இந்தியாவின் பெரும்பகுதியில் இந்துமித்தாக்சரா சட்டமுறையே நடைமுறையில் இருந்துவந்தது. வங்காளப்பகுதியில் மட்டும் இந்துதயாபாக சட்டமுறை நடை முறையில் இருந்துவந்தது. இந்துசாஸ்திர சட்டத்தின் படி, ஒரு இந்துசம்பாதித்த சொத்து, அவரின் தனிச்சொத்து ஆகும். அதில் அவரின் மகனுக்கோ, பேரனுக்கோ, எந்தவித பிறப்புரிமையும் கிடையாது. அதே போல, இந்துபெண்கள், தனக்கு என தனிச்சொத்துக்கள் வாங்கி வைத்துக்கொள்ளலாம். இந்துபெண்களின் சேமிப்பில் அல்லது திருமணத்தின் போதுகிடைத்த பரிசுப்பணத்தில் சொத்துவாங்குவதை சீதனச்சொத்து என்பர். பூர்வீகச்சொத்து என்பது, ஒரு இந்து ஆணுக்கு, அவரின் தந்தைமூலமோ, அல்லது அவரின்பாட்டன் மூலமோ, அல்லது அவரின் முப்பாட்டன்மூலமோ, வாரிசுமுறையில் சொத்துகிடைத்திருந்தால், அது அவருக்கு பூர்வீகச்சொத்து ஆகும். அதாவது இப்படிக்கிடைத்த சொத்து, அவருக்கு வாரிசுமுறையில் கிடைத்து உள்ளது. அவரின் சம்பாத்தியத்தில் வாங்கியசொத்து இல்லை. இப்படிப் பட்ட சொத்தைமட்டுமே பூர்வீகச்சொத்து என்பர். பூர்வீகச்சொத்து என்பதற்கு அடையாளமே, ஒரு இந்துவுக்கு அவரின் தந்தைமூலம், பாட்டன் மூலம், முப்பாட்டன் மூலம், ஆக மூன்று தலை முறைகள் ஆண் வழியில் அந்தசொத்தானது, இவருக்கு வாரிசு உரிமையில்வந்திருந்தால் மட்டுமே அது பூர்வீகச்சொத்து என்பர். ஒரு இந்துவுக்கு, அவரின் தாய் வழிப்பாட்டன் மூலம் ஒரு சொத்தானது வாரிசு முறையில் கிடைத்திருந்தால், அது பூர்வீகச்சொத்து இல்லை. ஏனென்றால், அது தாய் வழியில் வாரிசுமுறையில் கிடைக்கும் சொத்து. எனவேஅது பூர்வீகம் இல்லை. இப்படி கிடைக்கப்பெற்ற பூர்வீகச்சொத்துக்கு ஒரு சிறப்பு உண்டு. அது, அந்த சொத்தை அடைந்த அந்த இந்து ஆண், அவர்மட்டுமே அனுபவிக்கமுடியாது. அவரின் மகன், அவரின் பேரன், அவரின் கொள்ளுப்பேரன், என மூன்று தலைமுறைகளில் உள்ள ஆண்கள், அவர்களின் பிறப்பு உரிமையில் அந்த பூர்வீகச்சொத்தில் உரிமை கொண்டாட முடியும். அதற்கு மேலுள்ள தலை முறையான, அவரின் கொள்ளுப்பேரனின் மகன், அதில் பிறப்பால் உரிமை கொண்டாடமுடியாது. பூர்வீகச்சொத்து எத்தனை தலைமுறைக்கு வரும்? ஒரு சொத்து பூர்வீகமாகக்கிடைத்து உள்ளது என்றால், அந்த சொத்து கிடைத்தவரின் மகன், பேரன், கொள்ளுப் பேரன் என்ற மூன்று தலை முறை மட்டுமே பிறப்பால் உரிமை கொண்டாட முடியும். அதற்கு மேலுள்ள தலை முறை பிறப்பால் அந்தச்சொத்தில் உரிமை கோரமுடியாது. அதேபோல, ஒருவருக்கு, அவரின் தந்தை, பாட்டன், முப்பாட்டன் ஆகிய மூன்று தலைமுறை ஆண்களின் சொத்துக்களைத் தான் இதே போல பூர்வீகச்சொத்தாக கருதிக்கொள்ள முடியும். முப்பாட்டனின் தந்தையின் சொத்து ஒருவருக்கு பூர்வீகச்சொத்தாக பிறப்பால் உரிமை கோரமுடியாது. ஆக, ஒருவருக்கு, தகப்பன் வழியில் மேலேமூன்று தலைமுறையும், மகன்வழியில் கீழே மூன்றுதலை முறையும் ஆக இவருடன் சேர்த்தால், ஏழு தலை முறைகள் மட்டுமே பூர்வீக சொத்துரிமையை பிறப்பால் பெறமுடியும். இந்த ஏழுதலைமுறை ஆண்களை “கோபார்சனர்கள்” Coparceners, பங்காளிகள், கூட்டாளிகள், கூட்டுப்பங்காளிகள் என்று இந்து சாஸ்திரச்சட்டம் சொன்னது. ஒருவருக்குக்கிடைத்த பூர்வீகச்சொத்தை அவரும், அவரின் எத்தனை மகன்கள் இருந்தாலும், அவர்கள் அனைவரும் தலைக்கு ஒருபங்கு என எடுத்துக்கொள்வர். இதை அந்த மகனும் அவரின் மகனும் பேரனும் கூட்டாக, பூர்வீகச்சொத்தாக அனுபவித்து வருவர். இப்படி பங்கு பிரித்துக்கொள்வதை per stripes என்பர். பூர்வீகச்சொத்தில் பெண்களுக்கு பங்கு இல்லாமல் இருந்து வந்தது. 1937 ல் ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டு, அதன் படி, இறந்த ஆணின் விதவைமனைவி, அவளின்கணவரின் பங்கை அடைந்து அவளின் ஆயுட்காலம் வரை ஆண்டு அனுபவிக்கும் உரிமைமட்டும் வழங்கப் பட்டது. அந்த விதவை மனைவி அப்படிப்கிடைத்த பூர்வீகச்சொத்தின் தன் பங்கைவிற்பனை செய்யமுடியாது. அவள் வாழ்நாள் வரை அனுபவிக்க மட்டுமே முடியும் என்றநிலை இருந்தது. அவள் வாழ்நாளுக்கு பின்னர் அவள் கணவரின் மற்றபங்காளிகளுக்கு (கோபாசனர்களுக்கு) அந்த பங்கு போய்ச்சேரும். 1956 ல் இந்து சாஸ்திரச்சட்டத்தை அடியோடு மாற்றிவிட்டு, புதிதாக இந்துவாரிசு உரிமைச்சட்டம் கொண்டு வரப்பட்டது. அதில் பூர்வீகச்சொத்தில், இறந்த கணவரின் பங்கு அவரின் மனைவி மகள் உட்பட அவரின் வாரிசுகளுக்கு போய்சேரும் என்று மாற்றப் பட்டது. இதன்படியும், மகளுக்கு ஒரு சிறுபங்கே கிடைத்தது. மகளுக்கும் மகனைப்போலவே பூர்வீகச்சொத்தில் சம உரிமை கொடுக்கவேண்டும் எனக்கருதி, 2005 ல் இந்து வாரிசுரிமைச்சட்டத்தை திருத்தி புதியசட்டம் கொண்டுவரப்பட்டது. அதன் படி, மகளுக்கும் மகனைப்போலவே சரிசம பங்கு கிடைக்க வழி ஏற்படுத்தப்பட்டது. ***அனுபவஸ்தன்***

Tags:

#தமிழ்செய்தி #திகிரேட்இந்தியாசெய்தி #தினசரிசெய்திகள் #இன்றைய செய்தி #செய்திசேனல் #சென்னைசெய்தி #தமிழகசெய்திகள் #நகரசெய்தி #மாவட்ட செய்தி #இந்திய செய்தி #தமிழ்நாடு #சென்னை #மாவட்டம் #புதுச்சேரி #அரசியல் #குற்றம் #கல்வி #ஆன்மீகம் #உலகம் #மற்றசெய்திகள் #மணமாலை #மணமேடை #மணமக்கள் #கல்யாணமாலை #பக்தி #இன்றையசெய்திகள் #முக்கியசெய்திகள் #இன்றையசெய்திகள் #நகராட்சி #சினிமா #கலை #விளையாட்டு #மருத்துவம் #பாதுகாப்பு #அறிவியல் #ஜோதிடம் #அரசியல் #மருத்துவம் #பல்சுவை #போக்குவரத்து #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tamilnadunewstodaytamil #tamilnaduflashnewstamil #corporation
Comments & Conversations - 0