• முகப்பு
  • tamilnadu
  • பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஜூன் மாத சம்பளம் எப்படி?

பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஜூன் மாத சம்பளம் எப்படி?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

பகுதி நேர ஆசிரியர்களுக்கான முக்கிய செய்தி. பார்வை ( 1 ) இல் காணும் அரசாணைப்படி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேரப்பயிற்றுநர்கள் ஒரு வாரத்திற்கு 3 அரை நாட்கள் வீதம் பள்ளிகளில் பணி புரிந்தால் மட்டுமே அம்மாதத்திற்கான முழு ஊதியம் பெற இயலும் . ஆனால் 2022 23 ஆம் கல்வியாண்டில் ஜீன் மாதம் 13 ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது . இந்த மாதத்தில் பள்ளிகளில் 14 நாட்கள் மட்டுமே மொத்த வேலை நாட்களாக உள்ளது . எனவே 2022-23 ஆம் கல்வி ஆண்டின் மாணவர் சேர்க்கை மற்றும் பள்ளி செயல்பாடுகளில் பகுதி நேரப் பயிற்றுநர்கள் பங்கு கொள்கின்ற நிலையில் ஜீன் 2022 ஆம் மாதத்திற்கு மட்டும் வாரத்தில் நான்கு அரை நாட்களாக தலைமையாசிரியர்களால் வழங்கப்படும் கால அட்டவணையைப் பின்பற்றியும் . பகுதி நேரப்பயிற்றுநர்களை மாணவர்களின் நலன் கருதி பணிகளில் ஈடுபடுத்தியும் ஜீன் மாதம் முழு ஊதியம் வழங்கலாம் . பகுதி நேர பயிற்றுநர்கள் பணியாற்றாத நாட்களில் ஊதியம் பிடித்தம் செய்து வழங்கப்படும் என்பதால் விடுப்பு எடுத்த நாட்களுக்கு ஊதியம் வழங்க இயலாது . எனவே உரிய அறிவுரைகளைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது . செய்தியாளர் பா. கணேசன் (அனுபவஸ்தன்)

VIDEOS

RELATED NEWS

Recommended