• முகப்பு
  • pondichery
  • முதலமைச்சரை தள்ளிவிட்ட உள்துறை அமைச்சரின் பாதுகாவலர் மக்கள் கொந்தளிப்பு வைரல் வீடியோ

முதலமைச்சரை தள்ளிவிட்ட உள்துறை அமைச்சரின் பாதுகாவலர் மக்கள் கொந்தளிப்பு வைரல் வீடியோ

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

புதுச்சேரி அடுத்த வில்லியனூரில் கோகிலாம்பிகை உடனுறை அருள்மிகு திருக்காமேஸ்வரர் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம், ஆகியோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி துணைநிலை ஆளுநர் தமிழ் இசை மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி உள்துறை அமைச்சர் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைக்க வரும் பொழுது துணைநிலை ஆளுநர் தமிழ் இசையுடன் முதலமைச்சர் ரங்கசாமி உடன் வருகிறார். அப்பொழுது நமச்சிவாயம் சற்று பின்னோக்கி வருகிறார். அவருக்கு வழிவிடும் விதமாக நமச்சிவாயத்தின் பாதுகாவலர் ராஜசேகர் என்பவர் முதலமைச்சர் ரங்கசாமியை இடது கையால் தள்ளி விடுகிறார். இதனால் நிலை தடுமாறி பின்னோக்கி செல்லும் முதல் ரங்கசாமி சுதாரித்துக் கொள்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி உள்ளது. மேலும் இந்த வீடியோ பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போது உள்ள உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் பாதுகாவலராக பணிபுரியும் ராஜசேகர் கடந்த காங்கிரஸ் அரசில் நமச்சிவாயம் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது பாது காவலராக பணிபுரிந்து உள்ளார் என்பதும், திருபுவனை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து தற்போது மீண்டும் ரங்கசாமி தலைமையிலான ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருக்கும் நமச்சிவாயத்தின் பாதுகாவலராக பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.. பாண்டிச்சேரி செய்தியாளர் சக்திவேல்.

VIDEOS

RELATED NEWS

Recommended