Author: THE GREAT INDIA NEWS

Category:

புதுவை : வருகின்ற ஞாயிற்றுக்கிழமை அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுவை மாநிலத்திற்கு வருகை தர உள்ளார். புதுவை மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்க இருக்கிறார். எனவே அது சம்பந்தமாக காவல் துறை மூலமாக அவருக்கு அளிக்க வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகள் ஏடிஜிபி ஆனந்த் மோகன், ஐ.ஜி.சந்திரன் மற்றும் காவல்துறையை சேர்ந்த எஸ் .எஸ் பி. எஸ். பி உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் நடைபெற்றது. கூட்டம் முடிவுக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்.. புதுச்சேரி வருகை தரும் உள்துறை அமைச்சர் அமித் ஷா பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள இருப்பதால் அவருக்கு அளிக்க வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர் நமச்சிவாயம்.... அமித்ஷா வருகையால் புதுவை மாநிலத்தினுடைய வளர்ச்சிக்கும் அவருடைய வருகையானது நிச்சயமாக பயனுள்ளதாக இருக்கும் என்றார். மேலும் அரவிந்தர் மகான் ஸ்ரீ அரவிந்தர் 150-ஆவது பிறந்த தின விழா புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் கொண்டாடப்பட உள்ளது அந்த நிகழ்வில் கலந்து கொள்ளும் அவர் அரசு மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி உள்ளார் என்றும், மேலும் புதுவை மாநில வளர்ச்சிக்கு புதிய திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளதாகவும் அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார். பாண்டிச்சேரி செய்தியாளர் சக்திவேல். இன்றைய செய்திகள் பாண்டிச்சேரி ,இன்றைய முக்கிய செய்திகள் இந்தியா,இன்றைய செய்திகள் வணிகம்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,Today's pondichery news,Latest pondichery news tamil,Pondichery news today,home Minister amitsha,bjp

Tags:

Comments & Conversations - 0