• முகப்பு
  • ஆன்மீகம்
  • நாகை அருகே கொட்டும் மழையில் நடைபெற்ற புனித ஆரோக்கிய அன்னை ஆலய தேர் பவனி.

நாகை அருகே கொட்டும் மழையில் நடைபெற்ற புனித ஆரோக்கிய அன்னை ஆலய தேர் பவனி.

செ.சீனிவாசன்

UPDATED: May 6, 2023, 10:07:46 PM

நாகை மாவட்டம் வேப்பஞ்சேரி ஊராட்சி மேலத்தண்ணீலபாடி நீடூர் பகுதியில் புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் அமைந்துள்ளது. 

ஆலயத்தின் 15 ஆம் ஆண்டு திருவிழா மே 5 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நடைபெற்றது.

___________________________________________________

வீடியோவை பார்க்க கிளிக் செய்யவும் :-

https://youtu.be/tzZxTQd4WNU

___________________________________________________

முன்னதாக ஆலயத்தில் நாகை பங்கு தந்தை பன்னீர்செல்வம், உதவி பங்குத்தந்தை ராயல் பிரிட்டோ தலைமையில் சிறப்பு திருப்பலி, கூட்டுப்பாடல் பிரார்த்தனை, உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

அதனை தொடர்ந்து வண்ணமலர்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிகக்ப்பட்ட சப்பரத்தில் புனித ஆரோக்கிய அன்னை, செபஸ்தியார், செமன்ஸ் ஆகியோர் தனித்தனி தேரில் எழுந்தருள பங்குத்தந்தை புனிதம் செய்து தேர் பவனியை தொடங்கி வைத்தார்.

பேண்டு வாத்தியங்கள் முழங்க, கண்கவர் வானவேடிக்கைகளுடன் தொடங்கிய தேர் பவணியில் திடீரென இடி மின்னலுடன் மழை கொட்டித் தீர்த்து பக்தி பரவசத்தில் அதனையும் பொருட்படுத்தாமல் மழையில் நனைந்தபடியே தேர் பவனி நடைபெற வழி நெடுவிலும் உள்ள பக்தர்களும் மெழுகுவத்தி ஏந்தி பூ தூவி மழையையும் பொருட்படுத்தாமல் பக்தி பரவசத்தில் புனித ஆரோக்கிய அன்னை வழிபட்டனர்.

பேண்ட் வாத்தியங்கள் இசைக்க கொட்டும் மழையிலும் இளைஞர்கள் உற்சாகமாக நடனமாடியபடி முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர்பவனியில் திரளான பக்தர்கள் மற்றும் கிறிஸ்துவ சமுதாய முன்னேற்ற சங்க தலைவர்கள் கிராமவாசிகள் கிறிஸ்துவ மகளிர் முன்னேற்ற சங்கம் சார்ந்தவர்களும் பங்கேற்று அன்னையை வழிபட்டவர்.

மே 7ஆம் தேதி சிறப்பு திருப்பல்லி மற்றும் கூட்டுப் பாடலுடன் கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended