• முகப்பு
  • அரசியல்
  • விடுமுறை வேதாகம பள்ளி சிறுவர்கள் கொண்டாட்டம் நிறைவு விழா மற்றும் மரம் நடும் விழா விழிப்புணர்வு நிகழ்ச்சி.

விடுமுறை வேதாகம பள்ளி சிறுவர்கள் கொண்டாட்டம் நிறைவு விழா மற்றும் மரம் நடும் விழா விழிப்புணர்வு நிகழ்ச்சி.

சுரேஷ் பாபு

UPDATED: May 7, 2023, 7:28:28 PM

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் நகர் பகுதியில் அமைந்துள்ள பெண்டிகாஸ் சர்ச் ஆப் காட் ஆலயத்தில் சிறுவர்களின் விடுமுறை வேதாகம பள்ளியின் நிறைவு விழா நடைபெற்றது.

இதில் தலைமை போதகர் J. பிராங்கிளின் பெஸ்டஸ் தலைமையில் மரக்கன்றுகளை கொடுத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறுபிள்ளைகள் ஒன்றிணைந்து ஆடல் பாடல் நடனத்துடன் ஊர்வலமாக கையில் மரக்கன்றுகளை வைத்துக்கொண்டு கடந்து வந்து நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் ஐ.ஜெபகுமாரி அனி அவர்கள் கலந்து கொண்டு மாமரக் கன்றுகள் நிறைவு விழாவில் கலந்து கொண்ட விசுவாசிகளுக்கு மாமரக் கன்றுகளை கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தொடர்ந்து  பேசுகையில் மரங்களை நடுவதால் நாம் இயற்கையை பாதுகாக்கிறோம் என்றும் மரங்களினால் ஏற்படும் பயன்கள் குறித்து அவர் தெரிவித்தார் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வீட்டிற்கு மரம் நட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட சபை விசுவாசிகள் மற்றும் வேதாகம பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர், தொடர்ந்து நிறைவு விழாவை முன்னிட்டு பாடல்கள் நடனங்கள் விடுமுறை வேதாகம பள்ளியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகளும் வழங்கப்பட்டது.

தொடர்ந்து சபையின் தலைமை போதகர் பிராங்கிளின் அவர்கள் விசுவாசிகளுடைய வீட்டில் மாமர கன்றுகள் நடப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் எட்டாவது வார்டு கவுன்சிலர் G. சாந்தி கோபி,ஈக்காடு ஊராட்சி மன்ற தலைவர் S.லாஸ்னா சத்தியா, சுவிசேஷ யுத்தம் தலைவர் இளம் போதகர் ஐக்கியம் புள்ளரபாக்கம் PN பாலகிருஷ்ணன் மற்றும் சபை உறுப்பினர்கள் விசுவாசிகள் கலந்து கொண்டனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended