• முகப்பு
  • pondichery
  • புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி மொழி கட்டாயம் - வெடித்தது சர்ச்சை.

புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி மொழி கட்டாயம் - வெடித்தது சர்ச்சை.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற இயக்குனர் உத்தரவுக்கு புதுச்சேரி மாநில திமுக கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத் துறையின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது ஜிப்மர் மருத்துவமனை எனப்படும் ஜவஹர்லால் பட்ட மேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம். புதுச்சேரியில் இந்த ஜிப்மர் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. பொதுவாக மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் அலுவலக ரீதியான பயன்பாட்டிற்கு இந்தி மற்றும் ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது. இதனிடையே அலுவல் ரீதியான பயன்பாட்டை இந்தியில் மாற்றுவது தொடர்பாக புதிய சுற்றறிக்கையை ஜிம்பர் இயக்குநர் பிறப்பித்துள்ளார். அதாவது மத்திய அரசு அலுவலகங்களின் ரிஜஸ்டர் மற்றும் பைல்களில் இதுவரை இந்தி மற்றும் ஆங்கில மொழிகள் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்தச் சூழலில் ரிஜஸ்டர் மற்றும் பைல்களில் இனி வரும் காலத்தில் இந்தி மொழி மட்டுமே பயன்படுத்தப்படும் என்று ஜிப்மர் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு பெரும் பரபரப்பைக் உருவாக்கி உள்ளதோடு சர்ச்சையை கிளப்பி உள்ளது. ஜிப்மர் இயக்குநரின் இந்த உத்தரவுக்கு அரசியல் கட்சியினர் பலரும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சிவா கூறும்போது , மத்திய அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கையின் முயற்சி தான் இது என்றும் இதனை அனைத்து தரப்பினரும் ஒன்றாக இணைந்து எதிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சிவா. ஜிப்மர் மருத்துவமனையில் உயிர் காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு உள்ளது, பல்வேறு காலி பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்கள் நியமிக்கிறார்கள், இதுபோன்ற விவகாரங்களை செய்துவரும் ஜிப்மர் நிர்வாகம் தற்போது இந்திய திணிக்கும் வகையில் இந்தி மொழியை மட்டுமே ஜிப்மரில் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது கண்டனத்துக்குரியது, எனவே இதனை கண்டித்து ஜிப்மர் நிர்வாக அலுவலகத்தை திமுக சார்பில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக சிவா எச்சரித்தார். பேட்டி : சிவா, திமுக மாநில அமைப்பாளர், மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் புதுச்சேரி. பாண்டிச்சேரி செய்தியாளர் சக்திவேல்.

VIDEOS

RELATED NEWS

Recommended