• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • 230 கோடி செலவில் நெல்லிக்குப்பம் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் ஒரு சில தனிநபர்களை திருப்திப்படுத்தும் வகையில் நெடுஞ்சாலை பணி.

230 கோடி செலவில் நெல்லிக்குப்பம் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் ஒரு சில தனிநபர்களை திருப்திப்படுத்தும் வகையில் நெடுஞ்சாலை பணி.

குமரவேல்

UPDATED: May 9, 2023, 7:50:11 PM

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியில் கடலூர் - மடப்பட்டு (Sh09 ) நெடுஞ்சாலை பணியில் 230 கோடி ரூபாய் செலவில் நெல்லிக்குப்பம் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் ஒரு சில தனிநபர்களை திருப்தி படுத்தும் நோக்கத்தோடு செயல்படுவதாக கூறி,

மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து நம்ம நெல்லிக்குப்பம் பொது நல கூட்டமைப்பு சார்பில் மாபெரும் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை கடந்த 8ந்தேதி திங்கட்கிழமை அன்று கூட்டமைப்பினர் அறிவித்திருந்தனர். 

இந்நிலையில் கடலூர் கோட்டாட்சியர் தலைமையில் இன்று 09.05.2023 மாலை 3மணியளவில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறும் என நெல்லிக்குப்பம் காவல் ஆய்வாளர் சீனுவாசன் தெறிவித்திருந்தார்.

அதனைத்தொடர்ந்து 9.5.2023 அமைதி பேச்சு வார்த்தை வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமையில்  நடைபெற்றது.

மேற்படி அமைதிப் பேச்சுவார்த்தையில் பண்ருட்டி காவல் துணை கண்காணிப்பாளர் சபியுல்லா நெடுஞ்சாலை துறை அலுவலர்கள் மற்றும் பொதுநல கூட்டமைப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மேற்படி அமைதிப் பேச்சு வார்த்தையில் வரும் 10தினங்களுக்குள் கோட்டாட்சியர் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர், நெடுஞ்சாலை துறையினர் உள்ளிட்டோர் முன்னிலையில் பிரச்சினைக்குரிய இடங்களை அளவீடு செய்து சாலை விரிவாக்கம் பணிகள் நடைபெறும் என உறுதியளித்தனர்.

அதனைத்தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

  • 1

VIDEOS

RELATED NEWS

Recommended