• முகப்பு
  • விவசாயம்
  • பாபநாசம் அருகே கணபதி அக்ரஹாரம் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பருத்தி செடிகளில் ஒருவித மஞ்சள் தேமல் நோய் தாக்குதல் ..விவசாயிகள் வேதனை

பாபநாசம் அருகே கணபதி அக்ரஹாரம் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பருத்தி செடிகளில் ஒருவித மஞ்சள் தேமல் நோய் தாக்குதல் ..விவசாயிகள் வேதனை

தீனதயாளன்

UPDATED: May 7, 2023, 2:03:47 PM

தஞ்சை மாவட்டம் பாபநாசம் கணபதி அக்ரஹாரம் மற்றும் வழுத்தூர், உள்ளிட்ட பகுதிகளில் கோடை சாகுபடியாக விவசாயிகள் பல ஆயிரம் ஏக்கர் பருத்தி பயிரிட்டுள்ளனர்.

தற்போது ஒரு வார காலமாக கனமழை பெய்து வருவதால் பருத்தி உள்ளிட்ட பயிர்கள் முற்றிலும் பாதிப்படைந்து நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆயிரக்கணக்கில் முதலீடு செய்து பருத்தி பயிர் நடவு செய்துள்ள நிலையில் தற்போது பருத்தியில் மஞ்சள் தேமல் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. 

மேலும் இந்த நோயினால் பாதிக்கப்பட்ட பருத்தி பயிர்கள் குறைந்த அளவே பூக்கள் மற்றும் காய்கள் கொண்டுள்ளதால் பல ஆயிரக்கணக்கில் முதலீடு செய்து பருத்தி அறுவடை செய்வதற்கு முன்பே பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் இப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிப்பதோடு இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர் 

வேளாண்மைத்துறை அதிகாரிகள் உடனடியாக பருத்தி செடிகளை தாக்கும் மஞ்சள் தேமல் நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உடனடியாக உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended