• முகப்பு
  • district
  • நீலகிரியில் கடும் மழை.திமுக சார்பில் நிவாரண உதவிகள்

நீலகிரியில் கடும் மழை.திமுக சார்பில் நிவாரண உதவிகள்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

நீலகிரி மாவட்த்தில் கடந்த இரண்டு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், 13, 14 ஆகிய நாட்களில் பெய்த கனமழை காரணமாக உதகை நகரம் தலையாட்டிமந்து பகுதியில் வீடுகள் இடிந்து பாதிப்புக்குள்ளான மக்கள் பல்வேறு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள அனைவருக்கும் நீலகிரி மாவட்ட திமுக சார்பில், மாவட்ட கழக செயலாளர் பா.மு.முபாரக் அவர்கள் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மாவட்ட துணை செயலாளரும், உதகை நகரமன்ற துணை தலைவருமான ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் முஸ்தபா, உதகை நகரமன்ற தலைவர் வாணீஸ்வரி, உதகை ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட அமைப்பாளர்கள் காந்தல் ரவி, எல்கில் ரவி, ராஜா, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் நாகராஜ், மாவட்ட பிரதிநிதிகள் வெங்கடேஷ், கார்த்திக், நகரமன்ற உறுப்பினர்கள் ரீட்டா, சகுந்தலா, உட்பட கிளை கழக நிர்வாகிகள் மார்க்கெட் ரவி, குமார், புஷ்பா, பிரேமா, கண்ணியப்பன் உட்பட கழக நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். மேலும், உதகை ஏ.டி.சி அருகில் மரம் விழுந்த பகுதியினையும், நேற்று அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை தடுப்பு சுவர் இடிந்து விழுந்த பகுதியினையும் மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் அவர்கள் பார்வையிட்டு மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளிடம் வீடுகள் இழந்துள்ள 7 குடும்பங்களுக்கும், தமிழக முதல்வர் அவர்கள் உத்தரவுபடி குடிசை மாற்று வாரிய துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்களிடமும், நீலகிரி எம்.பி.இராசா அவர்களிடமும் விவரங்களை தெரிவித்து நானும், வனத்துறை அமைச்சரும் பரிந்துரை செய்து வீடுகள் வாங்கி தருவதாக உறுதியளித்தார்.

VIDEOS

RELATED NEWS

Recommended