• முகப்பு
  • district
  • கள்ளக்குறிச்சியில் ஸ்கேட்டிங் போட்டியில் உலக சாதனை புரிந்த சிறுவர்களுக்கு டிஎஸ்பி சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

கள்ளக்குறிச்சியில் ஸ்கேட்டிங் போட்டியில் உலக சாதனை புரிந்த சிறுவர்களுக்கு டிஎஸ்பி சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கள்ளக்குறிச்சி ஏ.எஸ்.ஜே ஸ்போர்ட்ஸ் அகடாமி சார்பில் ராபா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் சார்பில் நடைபெற்ற சிறுவர்களுக்கான ஸ்கேட்டிங் மற்றும் ரோல் பால் போட்டிகளில் வெற்றி பெற்று 15 மாணவர்கள் உலக சாதனையாளர்கள் பட்டியலில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல திண்டுக்கல்லில் நடைபெற்ற தமிழ்நாடு மினி ரோல் பால் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று 19 மாணவர்கள் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர் இந்த நிலையில் இந்த மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் கள்ளக்குறிச்சி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராஜலட்சுமி கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார் . அப்போது பேசிய டிஎஸ்பி ராஜலட்சுமி சிறுவர்களை சாதனையாளர்களாக மாற்றிய பெருமை அவர்களின் பெற்றோர்களையே சாரும் அவர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் கல்வி மட்டுமின்றி விளையாட்டிலும் மாணவர்கள் அதிக ஆர்வத்தை செலுத்தி பல்வேறு சாதனைகளை புரிய வேண்டுமென்றும் வாழ்த்திப் பேசினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பாலாஜி மற்றும் மாவட்ட ஸ்கேட்டிங் சங்க செயலாளர் சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர். கள்ளக்குறிச்சி செய்தியாளர் ஆதி சுரேஷ்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended