• முகப்பு
  • ஆன்மீகம்
  • குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு ஊர்வலம் கோலாகலம்! லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து வழிபாடு!

குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு ஊர்வலம் கோலாகலம்! லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து வழிபாடு!

வாசுதேவன்

UPDATED: May 15, 2023, 1:38:42 PM

வேலூர் மாவட்டம், குடியாத்தம் கவுடன்ய நதிக்கரையோரத்தில் உள்ள கெங்கையம்மன் சிறப்புமிக்கது. இந்த திருவிழா மாவட்ட அளவில் பெரியது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் தேரோட்டம் நடந்தது.

வைகாசி மாதம் முதல் தேதியன்று சிரசு ஊர்வலம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி நேற்று திங்கள்கிழமை (15-ம் தேதி) விடியற்காலை தரணம்பேட்டை முத்துமாரியம்மன் கோயிலில் ஆராதனை பூஜை செய்யப்பட்டு, விடியற்காலை 5 மணியளவில் கெங்கையம்மன் சிரசு ஊர்வலம் புறப்பட்டு தரணம்பேட்டை, என்.ஜி.ரெட்டி தெரு, கோபாலபுரம் வழியாக கெங்கையம்மன் கோயிலை வந்தடைந்தது.

ஊர்வலமாக வந்த சிரசுக்கு வழிநெடுகிலும் தாரை, தப்பட்டையுடன் இளைஞர்கள் வரவேற்பு அளித்தனர். பக்தர்கள் தங்களின் நேர்த்திகடனை செலுத்தினர்.

கோயிலில் உள்ள சண்டாளி உடலில் அம்மனின் சிரசு பொறுத்தப்பட்டது. பின்பு பக்தர்கள் தொடர்ந்து அம்மனை வழிபட்டனர்.

வேலூர், ராணிப்பேட்டை. திருப்பத்தூர், ஆந்திரா, கர்நாடகா பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் வருகை தந்து அம்மனை வழிபட்டனர்.

கெங்கையம்மன் சிரசு விழாவை முன்னிட்டு குடியாத்தம் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. காவல் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended