மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் !!!

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், ராஜ விக்னேஷ் மேல்நிலைப் பள்ளியில் வருகின்ற 25.06.2022 அன்று மாபெரும் தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதை முன்னிட்டு நடைபெற்றுவரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ப. ஸ்ரீ வெங்கட பிரியா.இ.ஆ.ப., அவர்கள், அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி,இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 25.06.2022 அன்று மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளியில் மாபெரும் தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 150க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு 30000த்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை அளிக்கவுள்ளனர். 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் உள்ளது. இளைஞர்கள் வேலைநாடுநர்களுக்காக இந்த சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாம் நடைபெறும் பள்ளியில் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகள், வாகன நிறுத்தும் இடம், வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்பவர்களுக்கான வழிகாட்டுப் பலகைகள் போன்ற முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருவதை பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ப. ஸ்ரீ வெங்கட பிரியா, இ.ஆ.ப., அவர்கள், அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி,இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர். முகாமிற்கு வரும் வாகனங்களில் தனியார் நிறுவனங்களின் வாகனங்கள், அரசு அலுவலர்களின் வாகனங்கள், கல்லூரிகளில் இருந்து வரும் பேருந்துகள், வேலை நாடுநர்களின் வாகனங்கள் எந்தெந்த இடங்களில் நிறுத்திவைக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் விரிவாக ஆய்வு செய்தனர். இம்முகாமில் 50,000 த்திற்கும் மேற்பட்ட வேலைநாடுநர்கள் இம்முகாமில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்புகள் படித்தவர்கள் வரை இந்த முகாமில் கலந்துகொள்ளலாம். அனுமதி இலவசம். பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட இளைஞர்கள், வேலைநாடுநர்கள் இந்த அரியவாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக்கொண்டனர். இந்நிகழ்வின்போது, வேலைவாய்ப்பு மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை திருச்சி மண்டல இணை இயக்குநர் மு.சந்திரன், வருவாய்த்துறை அலுவலர்கள், காவல்துறை அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொதுப்பணித்துறை அலுவலர்கள், வேலைவாய்ப்புத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்களும் உடனிருந்தனர். பெரம்பலூர் செய்தியாளர் ஜகாங்கீர்.

VIDEOS

RELATED NEWS

Recommended