• முகப்பு
  • தமிழ்நாடு
  • வெளிநாட்டில் இருந்து தமிழகம் திரும்பியவர்களுக்கு அரசின் புதிய திட்டம்.

வெளிநாட்டில் இருந்து தமிழகம் திரும்பியவர்களுக்கு அரசின் புதிய திட்டம்.

வாசுதேவன்

UPDATED: May 18, 2023, 6:20:39 PM

கோவிட் 19 தொற்றுகாரணமாக வெளிநாட்டில் வேலையிழந்து தமிழகம் திரும்பிய தமிழர்களில் தொழில் தொடங்கிட விழைவோரை ஊக்குவிப்பதற்கான தமிழ்நாடு அரசின் புதிய திட்டம் - MIGRANTS EMPLOYMENT GENERATION PROGRAMME (MEGP) தமிழக அரசால் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தில் உற்பத்தி பிரிவிற்கு ரூ.15.00 இலட்சம், சேவை மற்றும் வியாபாரத்திற்கு ரூ.5.00 இலட்சம் என கடன் உச்ச வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வயது வரம்பு 18 முதல் 45 வரை (பொது பிரிவினருக்கு 18 முதல் 55 வரை பெண்கள், SC, ST. BC, MBC, சிறுபான்மையினர், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு) குறைந்தபட்ச கல்வி தகுதி - 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு விசாவுடன் 2 ஆண்டுகளுக்கு குறையாமல் வெளிநாட்டில் வேலை பார்த்திருக்க வேண்டும். 01-01-2020 அல்லது அதற்கு பிறகு வெளிநாட்டிலிருந்து தமிழகம் திரும்பியவராக இருத்தல் வேண்டும்.

பொது பிரிவு விண்ணப்பதாரர்கள் 10% சிறப்பு பிரிவினரான மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர், முன்னாள் படை வீரர்கள், சிறுபான்மையினர் மற்றும் SC/ST/MBC/BC பிரிவு விண்ணப்பதாரர்கள் திட்ட மதிப்பீட்டில் 5% சொந்த பங்களிப்பு செய்ய வேண்டும்.

இத்திட்டத்தில் அரசின் மானியத் தொகை திட்ட மதிப்பீட்டில் 25% அதிகபட்சமாக 25 இலட்சம் வரை மானியமாக வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க https//www.msmetamilnadu.tn.gov.in/ https://www.nrtamils.tn.gov.inen என்ற வலைதள முகவரியில் கீழ் கண்ட ஆவணங்களை கொண்டு 1. கடவு சீட்டு (Pass port), 2 விசா நகல்( Visa Copy), 3. கல்விச் சான்று, 4. இருப்பிடச் சான்று, 5.சாதி சான்று, 6. மாற்றுத் திறனாளிகளுக்கான சான்று ஆகியவற்றின் நகல்கள் மற்றும் 7. திட்ட விபரங்கள்

விண்ணப்பிக்கலாம்:

மற்றும் 8. விலைப்புள்ளி (Quotation)  மேலும் கூடுதல் விவரங்களுக்கு பொது மேலாளர். மாவட்ட தொழில் மையம், காங்கேயநல்லூர் சாலை, காந்தி நகர், வேலூர் - 05 அவர்களை நேரிலோ அல்லது 0416-2242512, 2242413 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர், வேலூர், கேட்டுக்கொள்கிறார்.

இவ்வாறு பத்திரிகை செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

VIDEOS

RELATED NEWS

Recommended