• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • நெல்லிக்குப்பம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அரசு செயலர் கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் அங்கன்வாடிகள், மருத்துவ மனைகள் உள்ளிட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு.

நெல்லிக்குப்பம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அரசு செயலர் கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் அங்கன்வாடிகள், மருத்துவ மனைகள் உள்ளிட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு.

குமரவேல்

UPDATED: May 6, 2023, 10:04:37 AM

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அரசு செயலர் கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் அவர்கள் நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் அங்கன்வாடிகள், மருத்துவ மனைகள் உள்ளிட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அவருடன் வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, ஆணையர் (பொ) மகேஸ்வரி, வருவாய் ஆய்வாளர் அன்வர் தீன், கிராமநிர்வாக அலுவலர் ஆறுமுகம், நகர மன்ற துணை தலைவர் கிரிஜா திருமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மருத்துவமனை ஆய்வின் போது கவுன்சிலர் சத்யா மருத்துவ மனையில் சிகிச்சைக்கு வரும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு என தனியாக கழிவறைகள் ஏதும் இல்லை என மனு அளித்தார்.

மேலும் கடலூர் -மடப்பட்டு சாலை விரிவாக்கம் பணிகள் அளவீடு சரியாக இல்லை என நம்ம நெல்லிக்குப்பம் பொது நல கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் ஜெ.ராமலிங்கம் மற்றும் நிர்வாகிகள் மனு அளித்தனர்.

பதிலளித்து பேசிய அரசு செயலர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து அளவீடுகள் சரியான முறையில் அளந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை விரிவாக்கம் செய்யப்படும் என தெரிவித்தார்.

மருத்துவமனையில் பொது கழிப்பறை உடனடியாக கட்டித்தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என தெரிவித்தார்.

மருத்துவமனையில் பதிவேடுகள் மற்றும் பராமரிப்பு குறித்து கேட்டறிந்தார். மருத்துமனையில் மற்றபடி உள்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக உள்ளதாக தெரிவித்தார்.

VIDEOS

RELATED NEWS

Recommended