பறிபோகும் அரசு நிலம் - வேடிக்கை பார்க்கும் அவல நிலை.
மாரிமுத்து
UPDATED: Sep 26, 2023, 7:55:10 PM
கோவில்பட்டி அருகே குலசேகரபுரம் ஊராட்சி பெருமாள்பட்டி பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் பலரும் திடீரென கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்..
அரசு எவ்வித இலவச வீட்டு மனை பட்டாவும் லழங்கமால் கடந்த சில தினங்களாக அரசு புறம்போக்கு இடத்தினை ஆக்கிரமிப்பு செய்து சிறிய அறை கட்டி வருவதில் மர்மம் என்ன?
குறிப்பிட்ட தொகையை பெற்றுக் கொண்டு இடத்தினை பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருவதாக சான்றிதழ் அளிப்பது மர்மம் என்ன!!!
பல ஆண்டுகளாக சும்மா கிடந்த இடம் சில தினங்களாக கட்டிடமாக மாறும் மர்மம் என்ன?
ஊராட்சி முதல் தாலூகா அலுவலகம் வரை கூட்டு சதி நடத்து இருப்பதாகவும், பல ஆயிரம் ரூபாய் பணம் கை மாறி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது..
வரும் 1ந்தேதி முதல் ஊராட்சியில் அனைத்தும் ஆன் லைன் என்று அரசு அறிவித்துள்ளதால் அதற்கு முன்பாகவே அரசு புறம்போக்கு நிலத்தினை ஆக்கிரமிப்பு செய்து குறுக்கு வழியில் அனுமதி பெற்று விட பணிகள் ஜோராக நடைபெற்று வருவதாகவும்..
இது குறித்து தாசில்தார், கோட்டாட்சியர் வரை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை,
ஆளும் கட்சியை சேர்ந்த ஒருவரின் ஆசியுடன் பணம் பெற்றுக் கொண்டு நடைபெற்று வருவதால் தங்களால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்று வருவாய் துறை விழி பிதுங்கி நிற்கின்றனர்.
ஒரு சென்ட் கூட நிலம் இல்லாத ஏழை, எளிய மக்கள் பல ஆண்டுகளாக தங்களுக்கு சொந்தமாக வீடு கட்ட நிலம் கிடைத்து விடாத என்று பல முறை மனு அளித்தும் பல ஆண்டுகளாக காத்திருக்கும் அவர்களுக்கு இன்றைக்கு வரை ஏமாற்றம் தான்.
ஆனால் வசதி படைத்தவர்கள் பல தில்லு முல்லு வேலைகள் செய்து , அரசு அதிகாரிகளின் துணையுடன் அரசு புறம்போக்கு நிலத்தினை ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்களை கட்டி வருவது விந்தை.
குலசேகரபுரம் ஊராட்சியில் அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டிடம் கட்டி கொள்ள 70 ஆயிரம் முதல் 1லட்சத்து 50 ஆயிரம் வரை பணம் கையூட்டு பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட நிர்வாகம் இதில் உரிய விசாரணை நடத்தி கூட்டுச் சதியில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது மட்டுமின்றி, அந்த நிலங்களை பறிமுதல் செய்து, நிலம் இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு வழங்க வேண்டும்.