• முகப்பு
  • கூகிள் பே, ஆப்பிள் வாலட், மாஸ்டர் கார்ட், விசா...எல்லாம் ரஷ்யாவில் சேவையை நிறுத்தியது. இன்னும் ?

கூகிள் பே, ஆப்பிள் வாலட், மாஸ்டர் கார்ட், விசா...எல்லாம் ரஷ்யாவில் சேவையை நிறுத்தியது. இன்னும் ?

Kanishka

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

ஷெல் ஆயில் கம்பனி ரஷ்யாவின் உற்பத்தியை நிறுத்திவிட்டு வெளியேறியது கிரடிட் கார்ட், டெபிட் கார்ட் வேலை செய்யாததால் ரஷ்யர்கள் திண்டாட்டம்,. ஏடிஎம்கள், வங்கிகள் முடங்கின.... ரஷ்ய அரசின் பேஸ்புக் பக்கங்களை பேஸ்புக்கும், ட்விட்டரும் சென்சார் செய்து வெளியிடுகின்றன ஆக முதலாளித்துவம், உலகமயமாக்கல் என இந்த கம்பனிகள் பேசினாலும் இவை உலகமயான கம்பனிகளாக செயல்படவில்லை. அமெரிக்க கம்பனிகளாக தான் செயல்பட்டுள்ளன. வாடிக்கையாளர் சேவையே உயிர்மூச்சு என பேசிவிட்டு வாடிக்கையாளர்களை வங்கியில் பணம் எடுக்கவிடாமல் முடக்கியுள்ளன ரஷ்யாவுக்கும் உக்ரெய்னுக்கும் இருக்கும் பிரச்சனையில் நீங்கள் எந்த பக்கம் வேண்டுமானாலும் இருக்கலாம்... ஆனால் நாளை உங்கள் நாடு (அது எதுவாக இருப்பினும்) அதன் பொருளாதாரத்தை இந்த கம்பனிகளால் இப்படி எந்த காரணத்தை காட்டியும் முடக்கமுடியும். அவர்களுக்கு தேவை அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் கட்டளை மட்டுமே முக்கியமான பிரச்சனைகளில் இப்படி இவை செயல்படுவது நியாயம் என சப்பை கட்டு கட்டலாம். ஆனால் நாளை மிசோரத்தில் ஒரு பிரச்சனை என சொல்லி உங்கள் கிரடிட் கார்டை முடக்கி உங்களை பணம் எடுக்கவிடாமல் செய்தால் எப்படி இருக்கும்? உங்கள் ஓய்வுகால சேமிப்பின் மதிப்பு 90% ஆக சரிந்தால் எப்படி இருக்கும்? ஸ்விப்ட் வங்கி பரிவர்த்தனையில் இருந்து ரஷ்யாவை ஜெர்மனியும், அமெரிக்காவும் எப்படி முடக்க முடிகிறது? ஆக அது இந்த நாடுகளின் கட்டுபாட்டில் இருக்கும் அமைப்பா இல்லை ஒட்டுமொத்த உலகுக்கும் பொதுவான அமைப்பா? சீனா பேஸ்புக்கையும், ட்விட்டரையும், யூடியூபையும்,...ஏன் கூகிளை கூட தன் நாட்டில் தடுத்தது எத்தனை தொலைநோக்கான விசயம் என இப்போது தெரிகிறது கருத்து சுதந்திரம் என அலறும் இக்கம்பனிகள் ரஷ்ய அரசின் பக்கங்களை முடக்கியது எவ்வகை சுதந்திரம் என தெரியவில்லை அதுவும் ஐ.நா மாதிரி அமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க கூட செய்யவில்லை...அமெரிக்க அரசு சொல்லித்தான் செய்துள்ளனர். அல்லது தாமாகவே முன்வந்தும் செய்து இருக்கலாம் அல்லது இவர்கள் தப்பு நடக்கும் இடமெல்லாம் ஆஜராகி தட்டிகேட்கும் உத்தமர்கள் என்றால் நாளை எதாவது பிரச்சனை என்றால் அமெரிக்காவில் கிரடிட் கார்டு, டெபிட் கார்டை முடக்கும் தைரியம் இவர்களுக்கு உள்ளதா? நிச்சயம் செய்யமாட்டார்கள். இவர்களை நம்பி நம் வங்கிகள், தகவல் தொடர்பு ஆகியவை இருப்பது நல்லது அல்ல ரஷ்யாவுக்கு நடந்ததை பார்த்துவிட்டு இந்தியா ஸ்விப்டுக்கு மாற்றை ஆலோசித்து வரூவதாக செய்திகள் வெளியாக்யுள்ளன. விசா, மாஸ்டர்கார்டுக்கு பதில் ரூபேவும் இந்திய சந்தையில் செல்வாக்குடன் உள்ளது. பேஸ்புக், கூகிள், ட்விட்டரின் ஆதிக்கமும் இந்தியாவில் ஒழிக்கபடவேண்டும். உள்ளூர் மாற்றுகள் உருவாக்காபடவேண்டும் பேஸ்புக் இல்லைன்னாலும் நாம வேறு ஊடகத்தில் சந்திக்கலாம். ஆனால் நாட்டின் பொருளாதாரத்தை இவர்கள் கையில் கொடுக்ககூடாது. அப்புறம் எந்த நேரம் ஆப்பு வைப்பார்கள் என தெரியாது. பேசுவது உலகமயம். ஆனால் சான்பிரான்சிஸ்கோ லோக்கல் கம்பனிகளின் மனநிலையில் தான் நடந்துகொள்கிறார்கள். அதன்பின் அவர்களை அந்த மாதிரிதான் நடத்தவேன்டும்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended