• முகப்பு
  • அரசியல்
  • நெல்லிக்குப்பத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நுகர்வோர் பாதுகாப்பு சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 2023 ஆம் ஆண்டிற்கான பொதுக்குழு கூட்டம்.

நெல்லிக்குப்பத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நுகர்வோர் பாதுகாப்பு சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 2023 ஆம் ஆண்டிற்கான பொதுக்குழு கூட்டம்.

குமரவேல்

UPDATED: May 25, 2023, 10:26:56 AM

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நுகர்வோர் பாதுகாப்பு சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 2023 ஆம் ஆண்டிற்கான பொதுக்குழு கூட்டம் 25.5.2023 காலை நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு கௌரவ தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். கூட்டமைப்பு பொதுச்செயலாளர் மெய்யழகன் வரவேற்புரை ஆற்றினார்.

சங்க உறுப்பினர்கள் நெல்லிக்குப்பம் கவுன்சிலர் பன்னீர்செல்வம், பண்ருட்டி தலைவர் இராமச்சந்திரன், வடலூர் செல்வம், நெய்வேலி ராமச்சந்திரன், வீரசுந்தரி, சிதம்பரம் அப்பாவு, கடலூர் குணசேகரன், அண்ணாகிராமம் குமார்,  மேல் பட்டாம்பாக்கம் திருசங்கு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேற்படி கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் அரசாணை 389படி துறை வாரியாக நுகர்வோர் காலாண்டு கூட்டங்களை இனிவரும் காலங்களில் நடத்திடவும்,

கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்து வரும் நுகர்வோர் கூட்டங்களில் கொடுக்கப்பட்ட கோரிக்கைகளை இதுநாள் வரையில் பத்து ஆண்டுகளாக எந்த விதமான வகையிலும் பதிலளிக்க வில்லை.ஆகையால் பொதுமக்களுடன் சென்று கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும்,

நெல்லிக்குப்பம் நகராட்சியில் காலாண்டு கூட்டங்களில் வைக்கப்படும் கோரிக்கை புகார்களுக்கு சரியான பதில் தெறிவிக்காத அலுவலர்களை வன்மையாக கண்டிக்கின்றோம்.

மேலும் சாலைகள், தெருவிளக்குகள், உணவு பொருட்கள் தரமற்ற நிலையில் இருப்பதுடன் உண்மைத்தன்மையும் இல்லை.ஆகவே, இதனை கண்டித்து கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும்,

கடலூர் -மடப்பட்டு சாலை விரிவாக்கம் பணிகளை விரைந்து முடித்திடவும் தரமற்ற முறையில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும் சரியான அளவீடுகளின் படி சாலை விரிவாக்க பணிகளை மேற்கொள்ளவும் கூட்டமைப்பு கேட்டுக் கொள்வதாகவும்

உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் வணிகர்கள் நுகர்வோர்களுக்கு விற்பனை செய்ததற்கான ரசீது வழங்கப்படவில்லை என தெரிகிறது.

ஆகவே, நுகர்வோர்கள் ரசீது கேட்காவிட்டாலும் தானாக முன்வந்து விற்பனை பொருட்களுடன் ரசீதுகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் கூட்டமைப்பு சார்பில் நிறைவேற்றப்பட்டது என கூட்டமைப்பு தலைவர் மெய்யழகன் தெறிவித்தார்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended