Author: நெல்சன் கென்னடி

Category: தமிழ்நாடு

கால்நடைகளுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதி சேவைக்காக முதல் கட்டமாக ஐந்து அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு எட்டு கோடி ரூபாய்க்கு மேல் ஏற்கனவே வழங்கியதை அடுத்து தற்போது இன்று இரண்டாவது கட்டமாக 15 அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு,

1 கோடியே பதினான்கு இலட்சத்து ஐம்பத்து மூன்றாயிரத்து ஐநூற்று ஒன்று ரூபாயை மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் கால்நடை உணவு மற்றும் மருத்துவ வசதி சேவைக்கான காசோலையை தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன், கடலில் பேனா சின்னம் அமைப்பது குறித்த பத்திரிக்கையாளர் கேள்விக்கு அமைச்சர் அவர்கள்,

கடலிலேயே நினைவுச் சின்னம் அமைப்பது ஒன்றும் புதிதல்ல, கன்னியாகுமரி கடலில் திருவள்ளுவர் சிலை இருக்கிறது, அதேபோல் வெளிநாடுகளிலும் கடலிலே நினைவுச் சின்னங்கள் ஏராளமாக உள்ளன என்றும் கடலிலே பேனா சின்னம் அமைப்பதை சிலர் அரசியலுக்காக எதிர்த்து வருகிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார்.

Tags:

#இன்றையசெய்திகள்சென்னை , #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #indrayaseithigaltamilnadu , #indrayaseithigalchennai , #indrayaseithigalchennaitamilnadu , #todaynewstamilnadu , #todaynewschennaitamilnadu , #indrayaseithigalchennaitamilnadu , #TheGreatIndiaNews,TheGreatIndiaNews, #Tginews,news, #Tamilnewschannel, #TamilnewsFlash, #Tamilnewslivetv, #Latestindianewstamil, #Tamilnewsdaily, #Districtnews, #indianewslive, #indianewstamil, #worldnews, #indianewsintamiltoday, #indianewstodayintamil, #Todaysindianews, #indianews , #chennainewstoday , #chennainews , #chennailatestnews, #chennainewspapertamil,
Comments & Conversations - 0