• முகப்பு
  • education
  • நாளை முதல் ( 14 - 05 - 2022 ) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

நாளை முதல் ( 14 - 05 - 2022 ) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கீழ்கண்ட அறிவுரைகள் அரசு பள்ளி தலைமையாசிரியர்ளுக்கு தெரிவிக்கப்படுகிறது. 1. அனைத்து வகை அரசு/அரசு உதவி பெறும்/ சுயநிதி பள்ளிகளில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு இன்று 13.05.2022 உடன் தேர்வுகள் நிறைவு பெறுவதால் நாள் 15.05.2022 முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. 2. அனைத்து வகை அரசு/அரசு உதவி பெறும்/ சயநிதி பள்ளிகளில் விடைத்தாட்கள் திருத்துதல் 1 முதல் 9 வகுப்புகளுக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் தயாரித்தல் (தொடக்சு மற்றும் நடு நிலைப்பள்ளிகளிலும் ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் தயார் செய்யப்பட வேண்டும்) மற்றும் தேரச்சியறிக்கை பதிவேடு தயாரித்தல் போன்ற பணிகளை முடித்திட ஏதுவாக பள்ளி தலைமையாசிரியர்கள் 20.05.2022 வரை பள்ளிகளுக்கு வருகை புரிய வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது. 3. அனைத்து வகை அரசு/அரசு உதவி பெறும்/ சுயநிதி தொடக்க/ நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை பொறுத்தவரை பள்ளி மாணவர்கள்! ஆசிரியர்களின் வருகைப்பதிவு விவரம் EMIS இணையதளத்தில் உள்ள பதிவுகளுடன் ஒத்திருப்பதை சரிபார்க்க வேண்டும். . இரண்டு பதிவுகளும் வேறுபடும் பட்சத்தில் அவற்றை சரி செய்ய வேண்டும். மேலும் அவை இரண்டும் சரியாக உள்ளது. என்பதற்கான சான்றினை பள்ளி தலைமையாசிரியர்கள் சார்ந்த வட்டாரக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். 4. அனைத்து வகை அரசு/அரசு உதவி பெறும்/ சுயநிதி உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் மேற்காண் அறிவுரைகள் பொருந்தும். தேர்வுப்பணியில் உள்ள ஆசிரியர்கள் தேர்வுப்பணி முடிந்தவுடன் இப்பணியை மேற்கொள்ளலாம். 20.05.2022-க்குள் இப்பணியை முடித்துவிட்டால் அதன் பிறகு ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரிய தேவையில்லை எனத்தெரிவிக்கப்படுகிறது. உதாரணமாக திங்கள், செவ்வாய் (15.05.200 மற்றும் 17.05.2022) நாட்களில் பணிகள் முடிக்கப்பெற்றால் 18.05.200 முதல் பள்ளிக்கு வரத்தேவையில்லை. 5. மேலும் முன்னரே துறைத்தலைவரின் அனுமதி பெற்று வெளிநாட்டிற்கு செல்ல திட்டமிட்டுள்ள ஆசிரியர்கள் யாரேனும் இருப்பின் அவர்கள் மேற்காண் பணிகளை முடிப்பதில் இருந்து விலக்களிக்கப்படுகிறது. அவர்கள் திட்டமிட்டபடி பயணம் மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு தலைமை ஆசிரியர்களுக்கு அரசு அனுப்பிய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. செய்தியாளர்: பா. கணேசன்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended