• முகப்பு
  • district
  • 99வது பிறந்தநாளை முன்னிட்டு, வடக்கு மாவட்ட திமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்.

99வது பிறந்தநாளை முன்னிட்டு, வடக்கு மாவட்ட திமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கும்பகோணத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 99வது பிறந்தநாளை முன்னிட்டு, வடக்கு மாவட்ட திமுக சார்பில், அண்ணலக்ரஹாரம் காளிமுத்து நகரில் உள்ள கிராம சேவை மையத்தில் இன்று நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில், நூற்றுக்கணக்கானோர் ஆர்வமாக கலந்து கொண்டு மருத்து பரிசோதனை செய்தும், மருத்துவ ஆலோசனை பெற்றும், இலவசமாக நோய்க்குரிய மருந்து மாத்திரைகள் பெற்றுக் கொண்டும் பயன்பெற்றனர். கும்பகோணத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 99வது பிறந்தநாளை முன்னிட்டு, வடக்கு மாவட்ட திமுக சார்பில், தாராசுரம் சிட்டி யூனியன் வங்கியுடன் இணைந்து இன்று அண்ணலக்ரஹாரம் ஊராட்சிக்குட்பட்ட காளிமுத்து நகரில் உள்ள கிராம சேவை மையத்தில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க அன்பழகன் தலைமயில் நடைபெற்றது, முகாமிற்கு வந்த அனைவரையும் மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் முத்துச்செல்வன் வரவேற்க, இந்நிகழ்வில், மாவட்ட செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான எஸ் கல்யாணசுந்தரம், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ இராமலிங்கம், மாநகராட்சி துணை மேயர் சு ப தமிழழகன், ஒன்றிய பெருந்தலைவர் காயத்ரி அசோக்குமார் ஒன்றிய செயலாளர்கள் உள்ளுர் கணேசன், தாராசுரம் அசோக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். இம்முகாமில், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், குடும்ப நலம், பொது மருத்துவம், பித்தப்பை கோளாறு, தைராய்டு கட்டிகள், தீராத வயிற்றுவலி, குடல் புண், குடலிறக்கம், நரம்பு வலி, மூலம், பௌத்திம், சிசு குழந்தைகள் ஊட்டச்சத்து மருத்துவம், அலர்ஜி, ஆஸ்துமா, நிமோனியா காய்ச்சல், தும்மல், இருமல், நெஞ்சு சளி, காசநோய், குறட்டை, பெண்கள் நல மருத்துவம், கழுத்து வலி, முதுகு தண்டுவட வலி, தீரா மூட்டு வலி, எலும்பு முறிவு, தேய்மானம், இடுப்பு, முழங்கால் முழங்கை விரல் மூட்டு வலி, காது மூக்கு தொண்டை என அனைத்து பிரிவுகளிலும் மருத்துவம் பார்க்கப்பட்டது இம்முகாமில் மருத்துவர்கள் சுஜன், ரகுவரன், இராஜேஸ்வரன், சுபாஷினி, வின்சி, ஹரீஸ் பார்த்தீபன், அருண்ராஜ், கமலக்கண்ணன் ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் இம்முகாமில் கலந்து கொண்டு பொது மக்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகளையும், பரிசோதனைகளையும் மேற்கொண்டு, நோய்க்குரிய மருந்து மாத்திரைகளையும் இலவசமாக வழங்கினார்கள் என்பது குறிப்பிடதக்கது. கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்

VIDEOS

RELATED NEWS

Recommended