Author: THE GREAT INDIA NEWS

Category: tamilnadu

பொது மக்கள் பயணிக்க இலவச ஆட்டோவசதியை, குன்றத்துார் அருகேயுள்ள ஆதனுாரில், ஊராட்சிநிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. காஞ்சிபுரம்மாவட்டம் குன்றத்துார் ஒன்றியத்தில் ஆதனுார்ஊராட்சி அமைந்து உள்ளது. இங்கு உள்ள ஒன்பது வார்டுகளில் 20 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இந்த மக்கள் அருகே உள்ள கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம்பகுதிக்கு செல்ல போதிய போக்கு வரத்து வசதியில்லை. தாம்பரத்தில் இருந்து கூடுவாஞ்சேரி வழியே, நீலமங்கலம் செல்லும் அரசுபேருந்தில் ஆதனுார்மக்கள் பயணித்து வந்தனர். பொது மக்கள் போக்கு வரத்து வசதிக்காக, ஆதனுார் ஊராட்சிமன்ற நிர்வாகம்சார்பில் ஏழுஆட்டோக்கள் வாங்கப் பட்டுள்ளன. பேட்டரிமூலம் இயங்கும் இந்த ஆட்டோவின்பின் இருக்கையில் அமர்ந்து நான்குபேர் பயணிக்கமுடியும். இந்த ஆட்டோக்கள் ஆதனுார் ஊராட்சிக் குட்பட்ட டி.டி.சி., நகர், ஏ.வி.எம்.நகர், லட்சுமிபுரம், ஆதனுார்கிராமம் உள்ளிட்ட நான்கிடங்களிலிருந்து ஊரப்பாக்கம்பேருந்து நிலையத்திற்கு புறப் படுகிறது. காலை 7:00 மணிமுதல் 10:30 மணி வரையும், மாலை 4:30 முதல் 8: 30 மணிவரையும் இயக்கப்படுகிறது. ஆதனுார் ஊராட்சியைச்சேர்ந்த மக்கள் தங்களின் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை நகலை ஊராட்சிமன்றத்தில் கொடுத்தால், ஆட்டோவில்பயணிப்பதற்கான அடையாள அட்டை வழங்கப் படும். இந்தஅடையாள அட்டையை காட்டி ஆதனுார்ஊராட்சி மக்கள் இலவசமாக பயணிக்கின்றனர். செய்தியாளர் பா. கணேசன்

Tags:

#இன்றையசெய்திகள்தமிழ்நாடு #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழகம் #நகராட்சி #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tamilnadunewstodaytamil #tamilnaduflashnewstamil #corporation
Comments & Conversations - 0