அதிகவட்டி தருவதாக மோசடி புகார்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

நிதி நிறுவனங்கள் 26 இடங்களில் சோதனை. தமிழகம் முழுவதும் இருபத்தாறு இடங்களில் போலீசார் சோதனை. ரூபாய் 3½ கோடி பறிமுதல். சென்னை அமைந்த கரையை தலைமை இடமாக கொண்டு ஆருத்ரா கோல்டு என்ற நிதிநிறுவனம் செயல் படுகிறது. தமிழகம் முழுவதும் இதற்கு கிளைகள் உள்ளன. இந்த நிறுவனம் தங்கநகைகள் மீது கடன் மற்றும் பொது மக்களிடம் முதலீட்டுத்தொகையும் வசூலித்துவந்ததாக தெரிகிறது. ரூபாய் 1 லட்சம் முதலீடுசெய்தால், மாதம் ரூபாய் 36 ஆயிரம் வட்டி வழங்கப் படும் என கவர்ச்சியாக அறிவிப்புவெளியிட்டதால், இந்த நிறுவனத்தில் பொது மக்கள் பணத்தை முதலீடாக கொட்டியதாகவும், இந்த அளவுக்கு வட்டிகொடுக்க முடியாது என்றும், இதில் மோசடி நடக்கவாய்ப்பு உள்ளதென்றும் புகார்கள் வந்தன. மேலும் இந்ததிட்டத்தை செயல் படுத்த முறையாக ரிசர்வ்வங்கியிடம் அனுமதி பெறப் பட்டதா? என்றகேள்வியும் எழுப்பப் பட்டது. இந்த நிறுவனம் மீது சென்னைபொருளாதார குற்றப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பூர்வாங்க விசாரணைக்குப்பிறகு நேற்று பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் திடீரென்று நிறுவனத்தின் சென்னைதலைமை அலுவலகம் உள்ளிட்ட தமிழகம்முழுவதும் உள்ள அதன் கிளைகளிலும் சோதனைநடத்தினார்கள். 26 இடங்களில் நேற்றுகாலை தொடங்கி மாலைவரை இந்தசோதனை நீடித்தது. செங்கல் பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை கடலூர் காட்டு மன்னார் கோவில் ராணிப் பேட்டை போன்ற தமிழகம்முழுவதும் 26 இடங்களில் சோதனை நடை பெற்றது. செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

RELATED NEWS

Recommended