• முகப்பு
  • sports
  • இந்தியா உட்பட நான்கு அணிகள் சூப்பர் சுற்றுக்கு முன்னேற்றம்

இந்தியா உட்பட நான்கு அணிகள் சூப்பர் சுற்றுக்கு முன்னேற்றம்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

ஆசியகோப்பை ஹாக்கிப்போட்டி இந்தோனேசியா தலை நகர் ஜகர்தாவில் நடக்கிறது. ஆசியாவின் 7 மு ன்னணி அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டியில், லீக்சுற்றில் முதல் நான்கு இடங்களை பிடித்த ஜப்பான், மலேசியா, கொரியா, இந்தியா உட்பட நான்கு அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. சூப்பர் -4 ன் கடைசிச்சுற்று இன்று நடக்கிறது. அதில் இந்தியா - கொரியா அணிகள் மோத உள்ளன. அதில் வெற்றிப்பெற்றால் இந்தியா பட்டியலில் முதலிடம் பிடித்து பைனலுக்கு எளிதில் முன்னேறிவிடும். மாறாக ஆட்டம் டிராவில்முடிந்தால், மலேசியா - ஜப்பான் இடையிலான ஆட்டத்தின் முடிவு முக்கியமாக இருக்கும். மலேசியா வெற்றிப்பெற்றால் பைனலுக்கு முன்னேறும் வாய்ப்புக்கிடைக்கலாம். அதே நேரத்தில் ஜப்பான் வெற்றிப்பெற்றால் ஜப்பான், மலேசியாஅணிகள் போட்டியில் இருந்து வெளியேறும். எனவே இந்தியா, கொரியா அணிகள் பைனலில் மோதும். எப்படிப்பார்த்தாலும், இந்தியா இறுதி ஆட்டத்துக்கு முன்னேறும் வாய்ப்பில் உள்ளது. செய்தியாளர் க. துர்கா மதன்குமார்

VIDEOS

RELATED NEWS

Recommended