Author: THE GREAT INDIA NEWS

Category: pondichery

புதுச்சேரியில் சட்டமன்ற கடந்த சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு காங்கிரஸ் தலைமையை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை பரவலாக எழுந்து வந்தது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் ஆர்ப்பாட்டம், போராட்டங்களிலும் கோஷ்டி பூசல் அதிக அளவில் வெடித்து வந்தது. தற்போது காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள கோஷ்டி பூசல் பூதாகரமாக வெடித்துள்ளது. இதில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் ஏ வி சுப்பிரமணியன், வைத்திலிங்கம் எம்.பி, தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன், முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன், ஆகியோர் ஒரு அணியாகவும்,,,, முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், ஆகியோர் ஒரு அணியாகவும் பிரிந்து இரு கோஷ்டிகளாக செயல்பட்டு வருகின்றனர். இந்த இரண்டு கோஷ்டிகளும் எந்த ஒரு நிகழ்ச்சி நடந்தாலும் தனித்தனியாக சென்று அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தனர். இன்று இளைஞர் காங்கிரஸ் சார்பில் அண்ணா சிலை அருகே மத்திய அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் முதலாவதாக நாராயணசாமி தலைமையிலான அணியினர் போராட்டத்தில் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்கள்..... இதனை அடுத்து அவர்கள் புறப்பட்டுச் சென்றவுடன் அடுத்த ஐந்து நிமிடம் கழித்து முன்னாள் அமைச்சர் கந்தசாமி தலைமையில் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டு மத்திய அரசு கண்டித்து கோஷம் எழுப்பினார்கள்... இதுபோன்று மாறி மாறி கோஷ்டிகளாக செயல்படுவது புதுச்சேரி காங்கிரஸ் கட்சியில் புதிய உச்சத்தை அடைந்துள்ளது.. இந்த நிலையில் இவர்களை சமாதானப்படுத்தும் வகையில் காங்கிரஸ் அலுவலகத்தில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக சமாதான பேச்சு நடைபெற்றது இதில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி அவரது தரப்பினரும்.... முன்னாள் அமைச்சர் கந்தசாமி அவரது தரப்பினரும் கலந்து கொண்டனர். சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த பேச்சில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை... இது குறித்து காங்கிரஸ் தலைவர் ஏ .வி. சுப்பிரமணியன் கூறும் பொழுது.. காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி குறித்து தாம் கலந்து ஆலோசனை செய்ததாகவும், காங்கிரஸ் கட்சியில் கருத்து வேறுபாடு உள்ளது ஆனால் கோஷ்டி பூசல் இல்லை என்று விளக்கம் அளித்தார். தொடர்ந்து பேசிய அவர் தலைமையை மாற்ற வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு கடிதம் அனுப்பி உள்ளார்கள் அவர்கள் நினைத்தபடி இங்கு நடக்கவில்லை என்பதால் குழப்பத்தை விளைவிக்கிறார்கள் என்று அவர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து வைத்திலிங்கம் எம்பி கூறும்போது.... கட்சியின் வளர்ச்சிக்காகவே தங்கள் அனைவரும் அமர்ந்து பேசியதாகவும் எங்களுக்குள் எந்தவித கோஷ்டி பூசலும் இல்லை அனைவரும் ஒற்றுமையாக செயல்படுகிறோம் என்று விளக்கம் அளித்தார் பேட்டி; ஏ,வி. சுப்பிரமணியன் மாநிலத் தலைவர் காங்கிரஸ் புதுச்சேரி வைத்திலிங்கம் எம். பி. புதுச்சேரி. பாண்டிச்சேரி நிருபர் சக்திவேல்.

Tags:

#pondicherynewstoday #pondicherynewstamil #pondicherynewspapertoday #congress #pondicherycongress #narayanasamy #pondicherynewslivetoday #pondicherynews #இன்றையசெய்திகள்புதுச்சேரி #இன்றையசெய்திகள்புதுச்சேரிதமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடுமாவட்டங்கள் #indrayaseithigalpondichery #todaynewspondichery #todaynewstamilnadu #todaytamilnadunews #indrayaseithigalpondicherytamilnadu #indrayaseithigaltamilnadumavattangal #TheGreatIndiaNews #Tginews #news
Comments & Conversations - 0