• முகப்பு
  • political
  • திருவாரூரில் பெரியார் , எம்ஜிஆர் சிலைக்கு முன்னாள் அமைச்சர் காமராஜ் மாலை அணிவித்து மரியாதை.

திருவாரூரில் பெரியார் , எம்ஜிஆர் சிலைக்கு முன்னாள் அமைச்சர் காமராஜ் மாலை அணிவித்து மரியாதை.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

முன்னாள் உணவுத்துறை அமைச்சரும் அதிமுக மாவட்ட கழக செயலாளர் காமராஜ்க்கு சமீபத்தில் கழக அமைப்பு செயலாளராக அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்த முன்னாள் அமைச்சரும் அதிமுக மாவட்ட செயலாளர் காமராஜ் திருவாரூர் வருகை புரிந்தார், அப்போது திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் . இதனைத் தொடர்ந்து திருவாரூர் புது தெருவில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் பின்பு அங்கு கூடியிருந்த தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது மேலும் தனது சொந்தத் தொகுதியான நன்னிலம் சென்று நன்னிலம் பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதில் அதிமுகவை சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். திருவாரூர் செய்தியாளர் இளவரசன்.

VIDEOS

RELATED NEWS

Recommended